Homeசெய்திகள்திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி... இனி தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டாம்..!

திருப்பதி பக்தர்களுக்கு நற்செய்தி… இனி தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டாம்..!

நம்மில் பலரும் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என நினைக்கும் வழிபாட்டு தளங்களில் ஒன்று Tirupati ஏழுமலையான் கோவில். ஆனால் பலரும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு வெகுநேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் அங்கு செல்வதை தட்டிக்கழித்து வருவர். அதுபோல உள்ளவர்களுக்கு தான் இந்த நற்செய்தி.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டும் அன்றி வெளிநாடுகளிலும் பக்கதர்கள் அதிகம் தான். சிறிய தொழில் செய்பவர்கள் முதல் பெரிய தொழிலதிபர்கள் வரை அனைவரும் தங்களின் வசதிக்கேற்ப காணிக்கைகளை செலுத்தி வழிபாடு செய்கின்றனர். நம்மில் பலர் வருடத்திற்கு ஒருமுறையாவது திருப்பதி செல்வோம், அது போல உள்ளவர்கள் திருப்பதி கோவிலின் காணிக்கை செலுத்துவதற்காகவே ஒரு தொகையை சேர்த்து வைப்பார்கள். இதேபோல் தொழிலதிபர்கள் பலர் தங்களின் லாபத்தில் ஒரு தொகையை காணிக்கையாக செலுத்தி ஏழுமலையானை தனது பார்ட்னராக சேர்த்து கொள்கின்றனர்.

அதுமட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள் தேர்தல் நேரங்களிலும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படம் வெளியாகும் போது படம் வெற்றிபெற வேண்டும் என்று தரிசனம் செய்வதும் உண்டு. இதுபோல் பலரும் தங்களின் குறைகளை தீர்க்க வேண்டியும், பல வகையான புதிய வேண்டுதல்களை வைப்பதற்காக திருப்பதி வருவதுண்டு.

Tirupati Free Darshan

திருப்பதியில் எப்போதும் கூட்டம் அதிகமாகதான் இருக்கும் ஆனால் சில நாட்களாக கூட்டம் குறைவாக தான் உள்ளது. எனவே மக்களால் சாமி தரிசனம் விரைவில் செய்திட முடிகிறது. வழக்கமாக திருப்பதி கோயிலில் ஒரு நாளைக்க 80 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்யும் நிலையில் தற்போது 62 ஆயிரம், 64 ஆயிரம் என எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே பக்கர்கள் விரைவில் சாமி தரிசனம் செய்ய முடிகிறது.

தரிசனத்திற்காக நாள் கணக்கில் காத்திருந்த நிலை மாறி தற்போது சில மணி நேரங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடிகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இலவச தரிசனத்தில் 3 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர், செவ்வாய்க்கிழமை கூட்டம் சற்று அதிகரித்தது எனவே 3-7 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று 62,269 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்த நிலையில் 5.19 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலானது என்றும் 19, 255 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர் என்றும் தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் புதன்கிழமை மீண்டும் பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது. எனவே ஸ்ரீவாரி சர்வதரிசனத்தில் பக்தர்கள் காத்திருக்காமல் நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். இதனால் இலவச தரிசனத்தில் ஒரு மணி நேரத்திலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் வார இறுதிகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular