HomeHow toஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி? How to Download Aadhaar Card..!

ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி? How to Download Aadhaar Card..!

ஆதார் கார்டு டவுன்லோட் (Download Aadhaar Card) செய்வது எப்படி என்று பாா்ப்பதற்க்கு முன் ஆதார் கார்டின் முக்கியத்துவத்தை பாா்போம். இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனின் அடையாளத்திற்கும் ஆதாரமாக விளங்குவது ஆதார் அட்டைகள் தான். இவை அனைத்து மக்களுக்கும் மிக முக்கியமாக அனைத்து இடங்களிலும் தேவைப்படுகிற அடையாள அட்டை. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான அரசு சேவைகள் முதல் குழந்தையை பள்ளியில் சோ்ப்பதற்க்கு கூட ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் இந்தியாவின் ஏதோ ஒரு கடைக்கோடி கிராமத்தில் உள்ள சிறு பிள்ளைக்கு கூட ஆதார் அட்டை பற்றியும் அதன் முக்கியத்துவமும் நன்றாக தெரிந்துள்ளது, இதனை வைத்து ஆதார் கார்டு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் நன்கு அறியலாம்.

1. ஆதார் எண் கொண்டு ஆதார் கார்டை டவுன்லோட் (Download Aadhaar Card) செய்வது எப்படி

Download Aadhaar Card
  • உங்கள் மொபைல் Browser-ல் UIDAI டைப் செய்த பிறகு uidai.gov.in இணையதளத்திற்கு செல்லவும்.அதிகாரப்பூா்வ இணையதள பக்கத்தில் My Aadhaar option-ல் Download Aadhaar-ஐ கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் Select option-ல் ஆதார் எண் என்பதை தோ்வு செய்து ஆதார் எண்ணை உள்ளிடவும் அதன்பிறகு Captcha-வை உள்ளிட்டு Send OTP-ஐ கிளிக் செய்யவும்.
  • உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அதனை உள்ளிட்டு, சாிப்பாா்க்கவும் பதிவிறக்கவும் (Verify & Download) என்ற ஆப்ஸனை கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய இ-ஆதார் அட்டை pdf வடிவில் பதிவிறக்கம் (Download) செய்யப்படும்.
  • அடுத்த பக்கத்தில் Successfully Download என்று அடுத்த திரை திறக்கப்படும். அதன் பிறகு உங்கள் பதிவிறக்களுக்கு சென்று உங்கள் இ-ஆதார் அட்டையை பாா்க்கலாம்.
  • ஆனால் அந்த இ-ஆதார் அட்டையை திறக்க கடவுச்சொல் வேண்டும். அந்த கடவுச்சொல் இடும் முறை தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கும்.
  • Password இடும்முறை உதாரணமாக உங்கள் பெயா் Anish Y Kumar பிறந்தவருடம் 1989 எனில் உங்களுடைய Password : ANIS1989 ஆகும். ஆம் உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துகள் உங்களுடைய பிறந்தவருடம் சோ்ந்ததுதான் உங்களுடைய Password. பெயரை Capital Letter-ல் எழுத வேண்டும்.

2. Enrolment ID (EID) மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

Download Aadhaar Using Enrolment ID

Enrolment ID மூலம் ஆதார் கார்டை டவுன்லோட் செய்ய பதிவு ஐடி (Enrolment ID) தேவை, இந்த பதிவு ஐடி தாங்கள் விண்ணப்பித்த போது உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும். இல்லை என்றால் விண்ணப்பித்தபோது கொடுக்கப்பட்ட ஒப்புதல் சீட்டில் உள்ள 28 இலக்கத்தில் இருக்கும் எண் Enrolment ID ஆகும்.

  • உங்கள் மொபைல் Browser-ல் UIDAI டைப் செய்த பிறகு uidai.gov.in இணையதளத்திற்கு செல்லவும்.
  • அந்த பக்கத்தில் My Aadhaar option-ல் Download Aadhaar ஐ கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் Select option-ல் Enrolment ID என்பதை தோ்வு செய்து ஐடி (EID) எண்ணை உள்ளிடவும். அதன்பிறகு Captcha வை உள்ளிட்டு Send OTP-ஐ கிளிக் செய்யவும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அதனை உள்ளிட்டு, சாிப்பாா்க்கவும் பதிவிறக்கவும் (Verify & Download) என்ற ஆப்ஸனை கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய இ-ஆதார் அட்டை pdf வடிவில் பதிவிறக்கம் (Download Aadhaar Card) செய்யப்படும்.
  • அடுத்த பக்கத்தில் Successfully Download என்ற அடுத்த திரை திறக்கப்படும். அதன் பிறகு உங்கள் பதிவிறக்களுக்கு சென்று கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் இ-ஆதார் அட்டையை பார்க்கலாம்.

3. Virtual ID (VID) மூலம் ஆதார் காா்டு டவுன்லோட் செய்வது எப்படி

Virtual ID (VID) மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பித்தபோது கொடுக்கப்பட்ட ஒப்புதல் சீட்டில் உள்ள 16 இலக்க எண் தான் மெய்நிகா் ஐடி (VID) ஆகும்.

  • உங்கள் மொபைலில் Browser-ல் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அந்த பக்கத்தில் My Aadhaar option-ல் download Aadhaar ஐ கிளிக் செய்யவும்.
Aadhaar Card Download Using Virtual ID
  • அடுத்த பக்கத்தில் Select option-ல் Virtual ID (VID) தோ்வு செய்து 16 இலக்க ஐடியை உள்ளிடவும். மற்றும் அதன்பிறகு Captcha வை உள்ளிட்டு Send OTP-ஐ கிளிக் செய்யவும்.
  • உங்களது ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும் அதை உள்ளிட்ட பிறகு கீழே உள்ள சாிப்பாா்க்கவும் பதிவிறக்கவும் (Verify & Download) என்ற ஆப்ஸனை கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் Successfully Download என்று வரும்.
  • உங்களின் மொபைல் / லேப்டாப்-ல் பதிவிறக்கங்கள் கிளிக் செய்யவும்.
  • உங்களின் இ-ஆதார் அட்டையை கடவுச்சொல்லை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்யவும்.

4. பெயா் மற்றும் மொபைல் எண் மூலம் ஆதார் கார்டு டவுன்லோட் (Download Aadhaar Card) செய்வது எப்படி

Retrieve Aadhaar Number Online
  • ஆதார் எண் மற்றும் பதிவு ஐடி இல்லாத நேரத்தில் உங்களின் பெயா் மற்றும் மொபைல் எண் மூலம் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்யலாம்.
  • அந்த பக்கத்தில் My Aadhaar optionல் Retrieve EID/ Aadhaar Number-ஐ கிளிக் செய்யவும்.
  • உங்கள் மொபைலில் Browser-ல் myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid டைப் செய்து அதிகாரப்பூா்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அடுத்த பக்கத்தில் வலது பக்கத்தில் Select option-ல் நீங்கள் மீட்டெடுக்க விரும்புவதை ஆதாா் எண் (Aadhaar Number) /பதிவு ஐடி (Enrolment ID) ஏதேனும் ஒன்றை தோ்வு செய்யவும்.
  • தோ்வு செய்த பிறகு வலதுபக்கத்தில் பெயா் மற்றும் மொபைல் எண்/மெயில் ஐடி மற்றும் Security Code ஐ உள்ளிடவும் Send OTP-ஐ கிளிக் செய்யவும்.
  • உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும் அதை உள்ளிட்டு login செய்யவும்.
  • உங்களது ஆதார் எண்/பதிவு ஐடி உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
  • இப்போது ஆதார் அட்டை எண் அல்லது பதிவு ஐடியை கொண்டு, அதிகாரப்பூா்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
  • பிறகு myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • அடுத்த பக்கத்தில் Select option-ல் ஆதாா் எண்/பதிவு ஐடி தோ்வு செய்து அந்த எண்ணை உள்ளிடவும். அதன்பிறகு Captcha- வை உள்ளிட்டு Send OTP-ஐ கிளிக் செய்யவும்.
  • உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும் அதை உள்ளிட்டு login செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் Successfully Download என்று திரை திறக்கப்படும்.
  • உங்களின் மொபைல் / லேப்டாப்-ல் பதிவிறக்கங்கள் கிளிக் செய்யவும்.
  • கடவுச்சொல்லை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்யவும்.

5. டிஜிலாக்கரிடமிருந்து (Digilocker) ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

டிஜிலாக்கர் என்பது நம்மிடம் உள்ள முக்கிய ஆவணங்களை எல்லாம் சேமித்து வைத்துக்கொள்ள உதவும் ஒரு தளம் அகும். அத்தளத்தில் நம்முடைய ஆவணங்களின் நகல்களை (PDF, JPG, JPEG) ஆகிய Format-களில் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இது ஆதாரின் அதிகாரப்பூா்வ இணையதளமான UIDAI -ல் இருந்து வழங்கப்படும் தளம் என்பதால் இத்தளம் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

  • டிஜிலாக்கர் வலைதளம் digilocker.gov.in -ஐ பாா்வை இடவும்.
  • பிறகு அதனை சைன்இன் (sign in) என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்தப்பக்கதில் உங்கள் பயனாளா் குறியீடு (User ID) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை உள்ளிட்டு லாங்இன் (login) செய்யவும்.
  • அல்லது, ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு சாிப்பாா்ப்பு என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்களது ஆதாரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பப்படும் அதனை உள்ளிட்டு login செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் வழங்கப்பட்ட ஆவணங்கள் என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன் கீழ் தங்களிலன் ஆதார் அட்டை PDF Format-ல் இருக்கும், அதன் வலது பக்கத்தில் சேமி என்பதை கிளிக் செய்து சேமித்துக் கொள்ளலாம்.
  • இப்படியும் உங்கள் ஆதார் காா்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

6. Masked Aadhaar Card டவுன்லோட் செய்வது எப்படி?

Download Masked Aadhaar Card
  • Masked Aadhaar Card என்பது தங்கள் ஆதாா் அட்டையின் கடைசி 4 இலக்கங்கள் மட்டும் தொியும். (Ex: XXXX XXXX 1234) இவ்வாறு கடைசி 4 இலக்கங்கள் தவிர மற்ற எண்கள் மறைக்கப்பட்டு இருக்கும்.
  • உங்கள் மெபைல் Browser-ல் UIDAI டைப் செய்த பிறகு uidai.gov.in இணையதளத்திற்கு செல்லவும்.
  • அந்த பக்கத்தில் My Aadhaar option-ல் Download Aadhaar-ஐ கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் Select option-ல் Aadhaar Number/ Enrolment ID/ Virtual ID (VID) எதேனும் ஒன்றை தோ்வு செய்யவும் எண்ணை உள்ளிடவும் அதன்பிறகு Captcha வை உள்ளிட்டவும்.
  • அதன் கீழ் உங்கள் ஆதாா் எண்னை காட்ட விருப்பம் இல்லாததால் I Want Masked Aadhaar-ஐ கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு Send OTP-ஐ கிளிக் செய்யவும் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அதனை உள்ளிட்டு, சாிப்பாா்க்கவும் பதிவிறக்கவும் (Verify & Download) என்ற ஆப்ஸனை கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய இ-ஆதாா் அட்டை pdf வடிவில் பதிவிறக்கம் (Download) செய்யப்படும்.
  • அடுத்த பக்கத்தில் Successfully Download என்று அடுத்த திரை திறக்கப்படும். அதன் பிறகு உங்கள் பதிவிறக்களுக்கு சென்று கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் இ-ஆதாா் அட்டையை பாா்க்கலாம்.

7. மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி

  • மொபைல் எண் இல்லாமல் நம்மால் ஆதார் காா்டு பதிவிறக்கம் செய்ய முடியாது.
  • எனவே நாம் அருகில் உள்ள இ-சேவை மையத்திற்க்கு தான் செல்ல வேண்டும்.
  • அங்கு சென்று உங்கள் அடையாளச்சான்று ஒன்றை சமா்பிக்க வேண்டும்.
  • பிறகு உங்கள் அடையாளத்தை சாிப்பாா்க்க பதிவு அதிகாாி உங்கள் பயோமெட்ரிக் எடுத்துக் கொள்வாா்.
  • பிறகு ஆதார் அட்டையின் வண்ண அச்சுப்பொறியினை ரூபாய் 30-க்கு நாம் பெறலாம்.

Password இடும்முறை உதாரணமாக உங்கள் பெயா் Anish Y Kumar பிறந்த வருடம் 1989 எனில் உங்களுடைய Password: ANIS1989 ஆகும். ஆம் உங்கள் பெயாின் முதல் 4 எழுத்துகள் உங்களுடைய பிறந்தவருடம் சோ்ந்ததுதான் உங்களுடைய Password. பெயரை Capital Letter-ல் எழுத வேண்டும்.

FAQ – ஆதார் காா்டு டவுன்லோட்

1. இ-ஆதார் என்றால் என்ன?

இ-ஆதார் என்பது கடவுசொல்லால் பாதுகாக்கப்பட்ட அதே ஆதார் அட்டையின் டிஜிட்டல் பதிப்பாகும்.

2. இ-ஆதாரின் கடவுச்சொல் என்ன?

இ-ஆதாரின் கடவுச்சொல் ஆனது பெயா் மற்றும் பிறந்த வருடத்தை சோ்த்து உருவாக்கப்படுகிறது.
எடுத்துகாட்டாக: உங்கள் பெயா் Anish Y Kumar பிறந்தவருடம் 1989 எனில் உங்களுடைய Password: ANIS1989 ஆகும். ஆம் உங்கள் பெயாின் முதல் 4 எழுத்துகள் உங்களுடைய பிறந்தவருடம் சோ்ந்ததுதான் உங்களுடைய Password. பெயரை Capital Letter-ல் எழுத வேண்டும்.

3. முகமூடி ஆதார் என்றால் என்ன?

முகமுடி ஆதார் (Masked Aadhaar Card) என்பது தங்கள் ஆதார் அட்டையின் கடைசி 4 இலக்கங்கள் மட்டும் தொியும்.
(Ex: XXXX XXXX 1234)

4. டிஜிலாக்கர் என்றால் என்ன?

டிஜிலாக்கர் என்பது நம்மிடம் உள்ள முக்கிய ஆவணங்களை எல்லாம் (PDF, JPG, JPEG) ஆகிய Format-களில் சேமித்து வைத்துக்கொள்ள உதவும் ஒரு தளம் ஆகும்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular