Homeசெய்திகள்ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்..! கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்..!

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்..! கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள்..!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் படி சென்னையில் ஓட்டுநர் இல்லாத Metro Rails இயக்கப்பட உள்ளது. இந்த ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் தயாரிக்கப்பட உள்ளன.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை ஏற்படுத்துவதற்கும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் முதல் கட்டமாக தற்போது தினமும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு 42 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்ட Metro Train திட்டத்திற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான திட்ட பணிகள் அனைத்தும் வருகின்ற 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் இரண்டாவது கட்டமாக மெட்ரோ ரயில்கள் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ,), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை (26.1 கி.மீ.), மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (44.6 கி.மீ) என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்க திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மூன்று வழித்தடங்களிலும் மெட்ரோ பணிகள் முடிவடைந்த பிறகு புதிய தொழில்நுட்பங்களுடன் ரயில்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஓட்டுநர் இல்லாத 138 ரயில்களை இயக்க Chennai Metro Rail Limited திட்டமிட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்கள் தலா 3 பெட்டிகள் கொண்டிருக்கும். முதல் கட்டமாக 3 ரயில் பெட்டிகள் கொண்ட 36 ரயில்களை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதன்படி அல்ஸ்டோம் நிறுவனம் 108 ரயில் பெட்டிகளை தயாரித்து தரும்.

Driverless Metro Train in Chennai

இந்த Driverless Metro Trains கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. ரயிலில் இருபுறமும் முகப்பு பகுதியில் பிரத்யேகமாக அகலமான அவசரகால கதவுகள் அமைக்கப்பட்டும். ஆபத்து காலங்களில் பயணிகள் இதன் வழியே வேகமாக வெளியேற முடியும். மேலும் இந்த ரயிலில் பயணிகள் வசதியாக நிற்க அதிக இடவசதி, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள், செல்போன் மற்றும் மடிக்கணினி சார்ஜிங் வசதிகள் இருக்கும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, இரண்டாம் கட்ட திட்டத்தில் 116.1 கி.மீ தூரத்துக்கு பணிகளை முடித்து உள்ளன. 2028 ஆம் ஆண்டில் ரயில்களை இயக்கும் போது சென்னையில் எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் சேவைகள் கிடைக்கும். பயணிகள் நியாயமான கட்டணத்துடன் விரைவான பயணம் செய்ய முடியும். இந்த ரயில் 80 கி.மீ. வேகத்தில் செல்லும். அதிகபட்சமாக 90 வினாடிகளுக்கு ஒரு ரயில் இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னை மெட்ரோ ரயில் இயக்கத்தில் மாற்றம்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular