Homeசெய்திகள்நேபாளத்தில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 128-ஆக உயர்வு..!

நேபாளத்தில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 128-ஆக உயர்வு..!

நேபாளத்தில் காத்மாண்டு என்ற பகுதியில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலர் இடர்பாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் Earthquake ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல, காரணம் பூமிக்கடியில் நில தகடுகள் அதிகம் நகரும் இடத்தில் நேபாளம் இருப்பதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

கடந்த 2015ம் ஆண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8-ஆக பதிவு செய்யப்பட்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதேபோல் 8 பேர் உயிரிழந்தனர்.

Nilanadukkam in Nepal

கடந்த அக்டோபர் மாதத்தில் Nilanadukkam ஏற்பட்டது. இது போன்று அவ்வபோது லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டு இருந்தன. இதனையடுத்து நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவானது. இந்த நடுக்கத்தால் கட்டிடங்கள் சில குலுங்கி இடிந்து விழுந்தன. மீண்டும் இரவு 11 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் சிலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று காலை 5 மணி நிலவரப்படி இடிபாடுகளில் சிக்கி சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், தற்போது 128 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தின் மேற்கு பகுதியில் 36-பேரும், ஜாஜர்கோட் பகுதியில் 34-பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் டெல்லி, உத்திரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular