Homeசெய்திகள்Elon Musk: ஒரு தமிழரின் பெயரை தன் மகனுக்கு வைத்துள்ளார்...! யார் அவர்?

Elon Musk: ஒரு தமிழரின் பெயரை தன் மகனுக்கு வைத்துள்ளார்…! யார் அவர்?

எலான் மஸ்க் உலகில் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவர். இவர் தென் ஆப்பிரிக்காவில் 1971-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி பிறந்தார். இவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளரும் ஆவார்.

இவர் SpaceX, Tesla Motors நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார். பேபால் (PayPal), டெஸ்லா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஆரம்ப கால முதலீட்டாளரும் ஆவார்.

இந்நிலையில் இந்திய ஒன்றிய எலக்ட்ரானிக் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் Rajiv Chandrasekhar அவர்கள் சமீபத்தில் கனடாவில் நடைப்பெற்ற AI Safety Summit-ல் கலந்துக்கொண்டார். அப்போது அவர் ஒரு சுவாரஸ்சியமான தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஸ்பேஸ்-எக்ஸ், டெஸ்லா, X.Com (ட்விட்டர்) நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க்கின் மகன் நடுப் பெயர் (Middle Name) சந்திரசேகர் என கூறியுள்ளார். குழந்தையின் முழு பெயர் Subrahmanyan Chandrasekhar.

இந்த பெயரை எலான் மஸ்க் அவர்கள் இந்திய-அமெரிக்க இயற்பியலாளர், பேராசிரியர் சுப்ரமணிய சந்திரசேகர் அவரது நினைவாக தனது மகனுக்கு சூட்டி இருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவலை இந்திய Union Minister ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில், எலான் மஸ்க் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தோடு இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் யார் என்று பலரும் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு. இவர் 1910-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி தற்போது பாகிஸ்தானில் உள்ள லாகூர் பஞ்சாபில் பிறந்தார். இவர் தமிழ் பிராமின் குடும்பத்தில் பிறந்தவர். இயற்பியல் துறையில் உலகளவில் சிறந்து விளங்கியவர். இவருக்கு நட்சத்திரங்களின் கட்டமைப்பு மற்றும் பரிணாமம் குறித்த இவரது ஆய்வுக்காக இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 1983-ம் ஆண்டு பகிர்ந்தளிக்கப்பட்டது. இவருக்கு பத்ம விபூஷண் விருது இந்திய அரசால் 1968-ம் ஆண்டு அளித்து கௌரவிக்கப்பட்டது. மேலும், உலகளவிலும் இயற்பியல் சார்ந்த பல விருதுகளை இவர் வென்றுள்ளார்.

Elon Musk Son Name
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular