Homeசெய்திகள்Emergency Alert: எச்சரிக்கை ஒலி தான் யாரும் பயப்படவேண்டாம்..!

Emergency Alert: எச்சரிக்கை ஒலி தான் யாரும் பயப்படவேண்டாம்..!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரின் கைபேசிக்கும் நேற்று 11 மணியளவில் எச்சிரிக்கை ஒலி அனுப்பப்பட்டிருக்கும். அதனை முன்னரே அறிந்திருந்த மக்கள் யாரும் பயந்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு சில நபர்களுக்கு ஏன் இந்த அலர்ட் மெசேஜ் வருகிறது என்று பயந்திருப்பார்கள்.

இந்த எச்சரிக்கை ஒலியானது மத்திய அரசால் அனுப்பட்ட ஒரு குறுஞ்செய்தியாகும். அதாவது இன்றைய காலக்கட்டத்தில் அனைவரிடத்திலும் மொபைல் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த நிலையில் மக்களிடம் ஒரு செய்தியை அவசரமாக தெரிவிக்கவோ அல்லது அவர்களை தயார்படுத்தவோ ஒரே நேரத்தில் தெரிவிப்பதற்கு இது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. அதற்கான சோதனை ஓட்ட முயற்சியாக தான் அனைவரின் கைபேசிக்கும் இந்த ஒலி அனுப்பட்டது.

இவ்வாறு எச்சரிக்கை ஒலியானது தங்களின் கைபேசிக்கு வரும் என்று மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்பதற்காக குறுஞ்செய்தி வாயிலாக முன்னேரே அனுப்பட்டது.

அந்த குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், உங்கள் மொபைலில் எமெர்ஜென்ஸி சூழல் குறித்த டெஸ்ட் மெசேஜை வேறு ஒலி மற்றும் அதிர்வுடன் பெறலாம். தயவுசெய்து பீதி அடைய வேண்டாம், இந்த செய்தி உண்மையான அவசரநிலையைக் குறிக்கவில்லை. இந்தச் செய்தியை இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து திட்டமிட்ட சோதனைச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அனுப்புகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏன் இந்த சோதனை ஓட்டம் என்றால் பேரிடர் காலங்களில் மக்களிடம் ஒரு தகவல்களை துல்லியமாகவும், அவசரமாகவும் தெரிவிக்க இந்த செல்போன் எச்சரிக்கை ஒலி பயனள்ளதாக இருக்கும் என்பதற்காக இந்திய தேசிய பேரிடர் ஆணையம் தொலைதொடர்பு துறையின் செல் ப்ராட்காஸ்டிங் சிஸ்டம் மூலம் இந்த எச்சரிக்கை ஒலியானது அனுப்பட்டது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular