Homeலைஃப்ஸ்டைல்Leap Year in Tamil: உலகமே எதிர்பார்க்கும் ஒரு நாள்… லீப் ஆண்டின் ரகசியம்..!

Leap Year in Tamil: உலகமே எதிர்பார்க்கும் ஒரு நாள்… லீப் ஆண்டின் ரகசியம்..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக 29 ஆம் தேதி இருக்கும் அதுவே லீப் ஆண்டு (Leap Year in Tamil) என நம் அனைவருக்கும் தெரிந்து உண்மைதான். ஆனால் ஏன் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

லீப் ஆண்டை முதன் முதலில் ரோமானியர்களே கண்டுபிடித்தாக கூறப்படுகிறது. கி.மு. 45 ஆம் ஆண்டில் ரோமாபுரி நாட்டை ஆண்ட மன்னறான ஜூலியஸ் சீசர் காலகட்டத்தில் தான் இந்த லீப் இயர் கொண்ட காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டது என கூறப்படுகிறது. எனவே பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த லீப் இயர் பின்பற்றப்படுகிறது. இதன் படி நான்காண்டுகளுக்கு ஒரு நாள் பிப்ரவரி மாதத்தில் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. லீப் ஆண்டு (Facts About Leap Year in Tamil)பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

லீப் ஆண்டு என்றால் என்ன? (What is a Leap Year) Leap Year in Tamil

லீப் ஆண்டு என்பது தமிழில் நெட்டாண்டு (Leap Year Meaning) என அழைக்கப்படுகிறது. பூமி சூரியனை முழுவதுமாக சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவை தான் நாம் ஒரு வருடமாக எடுத்துக் கொள்கிறோம். அதேபோல் பூமியின் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் தான் என்று நாம் நினைக்கிறாம். ஆனால் பூமி சூரியனை சுற்றி வருவதற்கு 365.25 நாட்கள் ஆகிறது. அதோவது 365 நாட்கள் 5 மணிநேரம் 48 நிமிடங்கள் 46 வினாடிகள் ஆகின்றது.

இதுபோன்று ஒரு வருடத்தில் கூடுதலாக வரும் நேரத்தை சேர்த்து நான்கு ஆண்டுக்கு ஒரு நாளாக பிப்ரவரி மாத்தில் 29 வது நாளாக சோ்க்கப்படும். இவ்வாறு கூடுதலாக 1 நாள் உள்ள வருடம் தான் லீப் ஆண்டு (Leap Year) என கூறப்படுகிறது. இந்த லீப் ஆண்டு என்பது நாம் காலண்டர் (Calendar) பாதையில் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு வழியாக உள்ளது.

காலண்டர் என்றால் என்ன? (What is a Calendar)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காலண்டர் என்பது நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்களை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்தி வருடத்தில் வரும் நனைத்து நாட்களையும் குறித்து வைத்துக்கொள்ள முடியும். இந்த Calendar -ன் பெயர் கிரிகோரியன் காலண்டர் ஆகும்.

போப் பதிமூன்றாம் கிரிகோரி என்பதால் இந்த காலண்டர் பிரபலபடுத்தப்பட்டது இதன் காரணமாகவே இவரது பெயரால் இந்த Calendar கிரிகோரியன் காலண்டர் என அழைக்கப்படுகிறது.

ஆனால் லீப் ஆண்டு இந்த கிரிகோரி காலண்டருக்கு முன்பாக இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது இதற்கு முன்பாக இருந்த ஜூலியன் காலண்டரில் இந்த லீப் ஆண்டு இருந்தது என்று செல்லப்படுகிறது. ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீசர் தான் முதன் முதலில் இந்த லீப் ஆண்டு யோசனையை கொண்டு வந்தவர் என கூறப்படுகிறது.

லீப் ஆண்டை கணக்கிடுவது எப்படி? (How to Calculate Leap Year)

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டை கண்டறிவது எப்படி? அதனை கணக்கிடுவது எப்படி? (How to Find Leap Year in Tamil) என்ற பல கேள்விகள் அனைவர் மனதிலும் வரும். இந்த லீப் ஆண்டை கணக்கிடுவது மிகவும் சுலபமானது ஆகும். இதற்கு கணக்கிட போகும் ஆண்டினை எடுத்துக்கொண்டால் மட்டும் போது எளிதில் எந்தெந்த ஆண்டுகள் லீப் ஆண்டு என கண்டு பிடித்து விடலாம்.

4 ஆல் வகுபடும் வருடங்கள்

  • ஒரு வருடத்தை 4 ஆல் வகுக்கும் போது அதன் ஈவு சமமாக இருந்தால், அதாவது மீதி முழு எண்ணாக இருந்தால் அது லீப் ஆண்டு எனப்படுகிறது.
  • நாம் எடுத்துக்காட்டாக இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்வோம் அந்த இரண்டு ஆண்டுகளையும் 4 ஆல் வகுக்கும் பொது மீதி முழு எண்ணாக வர வேண்டும் அவ்வாறு வரும் ஆண்டு Leap Year எனப்படும். மீதி முழு எண்ணாக இல்லமல் இருந்தால் அது லீப் ஆண்டு அல்ல.
How Many Days in a Leap Year

100 ஆல் வகுபடும் வருடங்கள்

  • லீப் ஆண்டை கண்டுபிடிப்பதற்கு மற்றொரு வழிதான் 100 ஆல் வருப்பது ஆகும்.
  • ஒரு வருடம் 100 ஆல் வகுக்கும் போது மீதி சமமாக வந்தால் (முழு எண்ணாக) என்றால் அந்த வருடம் லீப் ஆண்டு எனப்படும்.
  • ஒரு வருடம் 4 ஆல் வகுபடும் ஆனால் 100 ஆல் வகுபடாது இது ஒரு லீப் ஆண்டு ஆகும். அதேபோல் 4 மற்றும் 100 ஆல் வகுப்படும் வகுப்படும் அதுவும் லீப் ஆண்டு ஆகும். எடுத்துக்காட்டாக. 2012
February Leap Year Days

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் 4 மற்றும் 100 ஆல் வகுப்படும் ஆண்டுகளும் லீப் ஆண்டு ஆகும். மேலும் இதனை உருதிப்படுத்த ஒரு வழி உள்ளது அதனையும் பார்ப்போம்.

400 ஆல் வகுபடும் வருடங்கள்

லீப் ஆண்டை கண்டுபிடிப்பதற்கு மற்றொரு வழிதான் 400 ஆல் வகுப்பது ஆகும். ஒரு ஆண்டு 100 ஆல் வகுபடும் போது அந்த ஆண்டு 400 வகுபடுமா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

  • 100 ஆல் வகுபடும் ஒரு ஆண்டு 400 ஆல் வகுபட வில்லை என்றாள் (முழு எண் கிடைக்க வில்லை) அந்த வருடம் லீப் ஆண்டு அல்ல.
  • 100 மற்றும் 400 ஆல் ஒரு ஆண்டு வகுக்கும் போது மீதி முழு எண்ணாக வந்தால் அந்த ஆண்டு ஒரு லீப் ஆண்டு ஆகும்.
Leap Year Condition

இது போன்ற கணித முறைகளை பயன்படுத்தில் ஒரு வருடம் லீப் ஆண்டா அல்லது லீப் ஆண்டு இல்லையா என்பதை கணக்கிட முடியும். அது மட்டுமின்றி தற்போது நிலைய அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அதனை பயன்படுத்தியும் நாம் லீப் ஆண்டை கண்டுபிடிக்க முடியும்.

அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறோம். அதில் காலண்டர் என்ற ஒன்று இருக்கும். அதில் நாம் வருடங்களை மாற்றி அதன் பிறகு பிப்ரவரி மாதத்தில் 29 ஆம் நாள் இருக்கிறதா என்று பார்பதின் மூலமும் லீப் ஆண்டை கண்டு பிடிக்கலாம்.

மேலும் படிக்க: Solar System in Tamil: சூரிய குடும்பம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!

Leap Year -FAQ

1. லீப் ஆண்டை கண்டு பிடித்தவர் யார்?

ரோமாபுரி மன்னன் ஜூலியஸ் சீசர் லீப் ஆண்டை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என கூற்படுகிறது.

2. 2024 ஆம் ஆண்டு லீப் ஆண்டா?

ஆம், 2024 ஆம் ஆண்டு ஒரு லீப் ஆண்டு ஆகும்.

3. பூமி சூரியனை சுற்றி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகிறது?

பூமி சுரியனை சுற்றி வருவதற்கு 365.25 நாட்கள் ஆகிறது. அதோவது 365 நாட்கள் 5 மணிநேரம் 48 நிமிடங்கள் 46 வினாடிகள் ஆகின்றது.

4. பிப்ரவரி மாதத்தில் 29 ஆம் தேதி எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது?

பிப்ரவரி மாதத்தில் 29 ஆம் நாள் நான்கு (4) வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular