Homeசெய்திகள்முக்கிய அறிவிப்பு..! நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய வீடு..!

முக்கிய அறிவிப்பு..! நடுத்தர வர்க்கத்தினருக்கு புதிய வீடு..!

இந்த ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆனது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த செவ்வாய் கிழமை (31.01.2024) அன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் தான் நேற்று (01.02.2024) நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் (Interim Budget 2024) செய்து உள்ளார் .

இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பிருந்தே இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏனெனில் இந்த மத்திய பட்ஜெட் மக்களவை தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் ஆகும். எனவே பல முக்கிய திட்டங்கள் மற்றும் பெரிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் (Mathiya Budget 2024 Schemes) என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல தான் பட்ஜெட் உரையின் போது பல பெரிய திட்டங்கள் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகளையும் நிதியமைச்சர் வெளியிட்டார்.

மேலும் அவர் பேசிய உரையில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டத்தை (New Housing Scheme in Mathiya Budget) மத்திய அரசு தொடங்கும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்க தடுப்பூசி திட்டம், ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் மற்றும் வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை என்பது போன்ற அறிவிப்புகள் வெளியாகின.

அதேபோல் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் மொத்தம் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும். இந்த திட்டத்தை (New Housing Scheme) மத்திய அரசு தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

Finance Minister
இதையும் படியுங்கள்: வருடத்திற்கு 18,000: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..! மகிழ்ச்சியில் மக்கள்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular