Homeலைஃப்ஸ்டைல்கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) ஏன் வெடிக்குது தெரியுமா? இதை மட்டும் செய்துவிடாதீர்கள் ஆபத்து உங்களுக்கு...

கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) ஏன் வெடிக்குது தெரியுமா? இதை மட்டும் செய்துவிடாதீர்கள் ஆபத்து உங்களுக்கு தான்..!

இன்றைய காலகட்டத்தில் எரிவாயு சிலிண்டரின் (Gas Cylinder) தேவை என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவரும் அறிந்ததே. ஒரு நாள் சிலிண்டர் எரிவாயு தீர்ந்துபோய்விட்டால் கூட அன்றைய நாள் நமக்கு சோதனை நாள் தான். என்னதான் கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே சென்றாலும் மக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்ட எரிவாயுவை மக்கள் வாங்கிதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு சென்றுவிட்டனர். சொல்லபோனால் இன்று அனைத்து வீட்டிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் மூலம் எரிவாயு இணைப்பு பெறாத பல குடும்பங்களுக்கு பிரதமர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் மூலம் பல வீடுகளிலும் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

இவ்வாறாக அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தும் சிலிண்டர்கள் பாதுகாப்பான முறையில் கையாளப்படுகிறதா என்றால் குறைவுதான். காரணம் கேஸ் சிலிண்டர்களினால் ஏற்படும் விபத்து அவ்வபோது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை பாதுகாப்பது எப்படி என்ற விழிப்புணர்வு இல்லாதது தான் இதற்கு காரணம்.

இந்த பதிவின் மூலம் நாம் சிலிண்டர்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும் என்று பார்க்கலாம்.

எப்பொழுதும் சிலிண்டர்களை நேராக வைத்துதான் உபயோகப்படுத்த வேண்டும். ஸ்டவ்-விற்கும் சிலிண்டருக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும். நடைபாதையில் வைத்தோ அல்லது படுக்க வைத்தோ உபயோகிக்க கூடாது. முக்கியமாக குழந்தைகளின் கைகளுக்கு எட்டாதவாறு ஸ்டவ் மற்றும் சிலிண்டர்களை உபயோகிக்க வேண்டும்.

புதிய சிலிண்டர்கள் மாற்றும் போது

நாம் கேஸ் தீர்ந்து போய்விட்டால் புக் செய்த பிறகு புதிய சிலிண்டர்கள் வரும். அப்படி வரும் சிலிண்டர்கள் பாதுகாப்பான முறையில் சீல் வைக்கப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். ஒரு வேளை சீல் உடைக்கப்பட்டிருந்தால் உடனடியாக மாற்றி வேறு ஒரு பாதுகாப்பான சிலிண்டரை வாங்க வேண்டும்.

அப்படி சிலிண்டர்களை மாற்றும் போது முதலில் கவனிக்க வேண்டியது ரப்பர் டியூப்-ல் ஏதேனும் பழுது உள்ளதா என பார்க்க வேண்டும். ஏனெனில் அதன் வழியாக கேஸ் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அடுத்தப்படியாக சீல் பிரிக்கப்பட்டவுடன் மேல் உள்ள வெள்ளை மூடியை அகற்ற வேண்டும். அதன் பிறகு சிலிண்டரின் குழாயின் உள்ளே உள்ள கருப்பு வாஷர் உள்ளதா என பார்க்க வேண்டும். இல்லையெனில் ரெகுலேட்டரை வைத்தது பொருத்தும்போது கேஸ் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ரெகுலேட்டரை வைத்து பொருத்தும் போது அதன் வால்வு கீழ்நோக்கி இருக்க வேண்டும்.

LPG சிலிண்டர்களின் காலாவதி தேதியை அறிந்துகொள்வது எப்படி

Gas Cylinder Expiry Date

புதிய சிலிண்டர்கள் வாங்கும் போது நம்மிலும் பலர் எடையை மட்டும் தான் பார்பார்கள். அந்த சிலிண்டரின் காலாவதி தேதியை (Expiry Date) பார்ப்பது கிடையாது. பழுதடைந்த சிலிண்டர்களினாலும் விபத்து ஏற்படும் என்பது உண்மை. நாம் வாங்கும் சிலிண்டர்களின் மேல் ABCD என்றும் அதனுடன் 22, 23, 24, 25 என எண்களும் குறிக்கப்பட்டிருக்கும். இதில் ABCD என்பது மாதங்களையும் எண்கள் காலாவதி ஆகும் வருடத்தையும் குறிக்கும்.

  • A- (ஜனவரி – மார்ச்)
  • B- (ஏப்ரல் – ஜூன்)
  • C- ( ஜூலை – செப்டம்பர்)
  • D- (அக்டோபர் – டிசம்பர்)

நீங்கள் வாங்கும் சிலிண்டரில் B-25 என்று இருந்தால் அது ஜூன் மாதம் 2025- ஆம் தேதி காலாவதியாகும்.

காற்றோட்டமான சமையல் அறை

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் வீட்டின் கட்டமைப்பு அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றவாரு ஒரு வீட்டின் சமையலறை பல மாடல்களில் வடிவமைக்கப்படுகிறது. கேஸ் சிலிண்டர்களை கட்டாயம் காற்றோட்டமான இடத்தில் தான் உபயோகிக்க வேண்டும். ஏனெனில் கேஸ் கசிவு ஏற்பட்டால் கூட பாதிப்பு இருக்காது. ஜன்னல்-க்கு சற்று தள்ளி ஸ்டவ்-வை வைத்து பயன்படுத்த வேண்டும். மின்சாரம் சார்ந்த சாதனங்களை பயன்படுத்தும் போது சிலிண்டருக்கு அருகில வைத்து பயன்படுத்த கூடாது.

சமைத்துக்கொண்டிருக்கும் போது சமையல் முடியும் வரை அங்கே இருக்க வேண்டும். ஸ்டவ்-வை பற்ற வைக்கும் போது தீக்குச்சியை பயன்படுத்தலாம். சிலர் லைட்டர்களை பயன்படுத்தும் போது அதில் அடைப்பு இருந்தால் எளிதில் பற்ற வைக்க முடியாது இதனால் கேஸ் வீணாக வெளியில் பரவுவதை தடுக்கலாம்.

அடிக்கடி ரெகுலேட்டரை ஆஃப் செய்யாமல் இரவு தூங்க செல்லும் போதும் மற்றும் வெளியில் செல்லும் போது மட்டும் ஆஃப் செய்தால் போதும்.

பழுது ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்

ஒரு வேளை கேஸ் கசிவு ஏற்பட்டால் பயப்படாமல் வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் கதவுகளையும் திறந்துவிட வேண்டும். உடனடியாக கேஸ் அலுவலகத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தானாக பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular