HomeசினிமாGhilli Movie Re Release: 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில்..! தேதியை அறிவித்த படக்குழு..!

Ghilli Movie Re Release: 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில்..! தேதியை அறிவித்த படக்குழு..!

தமிழ் சினிமாவில் இந்த காலத்திற்கு ஏற்றாற்போல பல படங்கள் தொடர்ந்து வெளியானாலும் பல வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் மீது உள்ள ஆர்வம் அதிகமாக தான் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களுக்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த படங்களை எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கின்றனர்.

இதன் காரணமாக பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படங்களாக மாறிய படங்களை தற்போது மீண்டும் ரீரிலிஸ் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தான் பல படங்கள் ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த படங்களை பார்ப்பதற்கு ரசிகர்களும் அதிக அளவில் வருகின்றனர்.

இந்த வரிசையில் தான் தற்போது நடிகர் விஜயின் சூப்பர் ஹிட் படங்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் படமான கில்லி திரைப்படம் மறுஒளிபரப்புக்கு (Ghilli Movie Re Release) செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு கூட பல வருடங்கள் முன்பு விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற திருமலை திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தான் தற்போது இந்த கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இப்படத்தில் (Ghilli Movie) கதாநாயகனாக விஜய் மற்றும் கதாநாயகியாக நடிகை திரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தில் இவர்களின் எதார்த்தமான நடிப்பு பலருக்கும் பிடித்து இருந்தது. இப்படமானது கடந்த 2004-ம் ஆண்டு வெளியானது. மேலும் இந்த கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Ghilli Tamil Movie

இந்நிலையில் தான் தற்போது இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள காரணத்தால் இந்த படத்தை வருகிற ஏப்ரல் மாதம் 20-ம் தேதி (Ghilli Movie Re Release Date) மீண்டும் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. தற்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular