Homeசெய்திகள்விராலிமலை ஆட்டு சந்தை: 1 கோடியே தொட்டது ஆட்டு விற்பனை

விராலிமலை ஆட்டு சந்தை: 1 கோடியே தொட்டது ஆட்டு விற்பனை

இந்த வருடம் தீபாவளி வர இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் இன்று நடைபெற்ற விராலிமலை ஆட்டு சந்தையில் அதிக அளவிலான ஆடுகள் வரத்தால் கால்நடை வளர்ப்போர் எதிர்ப்பார்த்த விலை கிடைக்கவில்லை என்றாலும் வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்கி சென்றனர்.

விராலிமலை ஆட்டு சந்தை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அதிகாலையிலேயே ஆட்டு சந்தை தொடங்கி வியாபாரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்க சென்னை, திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வியாபாரிகள் வந்து தங்கி அதிகாலை நடைபெறும் Viralimalai Goat Market -ல் ஆடுகளை வாங்கி லோடு, வாகனங்களில் ஆடுகளை ஏற்றி செல்வார்கள்.

ஆடுகள் விற்பனை

இந்த சந்தை தீபாவளி வரும் நேரத்தில் நடைபெற்ற என்பதால் அதிக அளவிலான ஆடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்தன. இதில் 5 கிலோ எடை கொண்ட ஆடுகள் 7,000 முதல் 8,000 வரையும், 8 கிலோ எடை கொண்ட ஆடுகள் 10,000 முதல் 12,000 வரையும், 10 கிலோ எடை கொண்ட ஆடுகள் 17,000 முதல் 20,000 வரையும் Goat Price-ஐ நிர்ணயம் செய்து வியாபாரிகளிடம் கால்நடை வளர்ப்போர் கூறிய நிலையிலும், அதிக ஆடுகளின் வரத்து இருந்ததால் Traders அதிக விலை கொடுத்து ஆடுகளை வாங்கவில்லை.

Goat Market price

விற்பனைக்கு கொண்டு வந்த ஆடுகளை திருப்பி கொண்டு செல்ல மணமில்லாத கால்நடை வளர்ப்போர் கிடைத்த விலைக்கு ஆடுகளை விற்றனர். இதனால் கால்நடை வளர்ப்போர் நினைத்த விலைக்கு விற்பனை நடக்கவில்லை. இருப்பினும் இன்று அதிகாலை தொடந்கிய Goat Market -ல் காலை 7.30 மணி அளவிலேயே சுமார் 1.25 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular