Homeசெய்திகள்Bank Holiday: இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை..! மத்திய அரசு அறிவிப்பு..!

Bank Holiday: இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை..! மத்திய அரசு அறிவிப்பு..!

வங்கிகளுக்கான விடுமுறை குறித்து மத்திய நிதி அமைச்சகம் பார்லிமென்டில் சில கருத்துக்களை தெரிவித்தது. அப்போது அனைத்து வங்கிகளுக்கும் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறையாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு இதற்கான முன்மொழிவு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது. இந்த திட்டத்தின் வாயிலாக இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் எல்லா சனிக்கிழமையும் விடுமுறை என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, இதன் மையகருத்து என்னவென்றால், வங்கிகளில் ஒரு வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக இருக்கவேண்டும் என்பது தான். இந்த திட்டத்தை ஐபிஏ முன்வைத்துள்ளதாக நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கம் அனைத்து வங்கிகளுக்கும் புதிய விதி ஒன்றை அமல்படுத்தியது, இந்த விதியின் படி மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் மட்டும் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்று முதல் நாட்டின் அனைத்து வங்கிகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். இது கட்டாய விடுமுறை ஆகும் மற்றும் நாட்டின் பொதுத்துறை முதல் தனியார் துறை வரையிலான வங்கிகளுக்கும் இது பொருந்தும்.

Bank Holidays

இந்நிலையில் நீண்ட நாட்களாக பொது மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகள் இது பற்றி பலமுறை கேள்வி எழுப்பியுள்ளனர். அதுபோல இந்தியாவின் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் மற்றும் ஐபிஏ உறுப்பினர்களின் கீழ் உள்ள அகில இந்திய நிதி நிறுவனங்களும் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளன.

ஒவ்வொரு சனிக்கிழமையும் விடுமுறை என்ற முன்மொழிவானது ஐபிஏ-விடம் இருந்து பெறப்பட்டுள்ளது என நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் கூறியுள்ளார். எனினும் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது எதிர்காலத்தில் செயல்படுத்தப்படுமா என்பது பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. ஆனால் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யும் பலனைப் பெறுவது மட்டுமல்லாமல், வேலை நேரம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த விடுமுறையால் வங்கிகளில் 5 நாள் வேலை முறை அமல்படுத்தப்படும், ஆனால் இதனை ஈடுகட்ட ஊழியர்கள் தினமும் 40 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருக்கும். அதாவது அவர்களின் வேலை நேரம் காலை 9:45 முதல் மாலை 5:30 வரை என்னும் கணக்கில் இருக்கலாம்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular