Homeசெய்திகள்மௌன ராகம் மோகன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்..! ஹரா அப்டேட்..!

மௌன ராகம் மோகன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்..! ஹரா அப்டேட்..!

தமிழ் சினிமாவில் அதிக அளவு வெற்றி படங்களை கொடுத்தவர் தான் நடிகர் மோகன். இவர் தற்போது கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் கதாநாயகனாக நடிக்க இருப்பதால், இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் மைக் மோகன் தற்போது நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் தான் ஹாரா திரைப்படம்.

எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் ஆகியவர்கள் இளந்த இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி ஆக்ஷன் திரைப்படமாக இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியிடப்பட்டு செய்தியாளர்கள் சந்திப்பும் நடந்தது. இதில் படக்குழுவினர்கள் பங்கேற்றார்கள். அப்போது பேசிய தயாரிப்பாளர் எஸ் பி மோகன் ராஜ் இந்த படம் நாங்கள் தயாரிக்கும் இரண்டாவது படம் என்றும், முதல் படம் பவுடர் எனவும் கூறினார். இந்த ஹரா திரைப்படம் முழுவதும் கோயம்பத்தூரில் தான் படமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்த திரைப்படம் நன்றாக வந்துள்ளது என்றும் தங்களின் ஆதரவை இந்த படத்திற்கு தாருங்கள் என கேட்டுக்கொண்டார்.

பிறகு பேசிய படத்தின் கதாநாயகன் மோகன் நான் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் நான் நடித்த படங்கள் எல்லாம் லிஸ்ட் வைத்துக்கொண்டதே இல்லை. ஹரா (Hara Mohan Movie) தான் என் முதல் படம் என கூறினார். எனக்கு மார்க்கெட் வந்த பிறகு நான் பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளேன். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் வெறியோடு படம் செய்வார்கள் என கூறினார். அது போல நான் நடித்த திரைப்பட பாடல்கள் எல்லாம் என்னை ரசிக்கிறார்கள். அதற்கு இசைஞானி தான் காரணம் என்றும், ஆர் சுந்தர்ராஜன் போன்ற இயக்குநர்கள் என்னை இயக்கியது தான் காரணம் என கூறினார். நான் எப்போதும் மார்க்கெட் பற்றி யோசிக்கவே மாட்டேன். ஒரு படம் நான் நடிக்க வேண்டும் என்றால், நான் நடிக்க வேண்டும் அவ்வளவு தான் என கூறினார்.

Mic mohan New Movie

நான் ஹரா (Mic mohan New Movie) திரைப்படம் நடிக்க காரணம் நிகில் தான் விஜய் ஸ்ரீயை அழைத்து வந்தார். கதையில் எனக்கு தயக்கம் இருந்தது அதனை 7 முறை மாற்றி தான் இந்தபடத்தை எடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் விஜய் ஸ்ரீயிடம் ஒரு லைட் அண்ட் சவுண்ட் சென்ஸ் உள்ளது. இந்த திறமை இவரை பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என கூறினார். இப்படத்தில் சிங்கம்புலி, அனுமேல் முதலாக இணைந்து நடித்த அனைவருக்கும் நன்றி, அனைவரும் படம் பாருங்கள் (Hara Mohan Movie Release Date )உங்களுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் என கூறினார்.

மேலும் படிக்க: களவாணி படத்தில் நடித்த விமலின் தங்கையா இவர்.. அடையாளமே தொியாமல் மாறி போன விமல் தங்கை..
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular