Homeசெய்திகள்தென்மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை..!

தென்மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை..!

சில நாட்களுக்கு முன்பு தமிழக தென் மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கனமழை பெய்து வந்தது. இந்த மழையால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பினை தென் மாவட்டங்கள் சந்தித்தன. இப்போது தான் அந்த பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவிலான சேதத்தை சந்தித்துள்ளது. பல இடங்களில் இன்னும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. ஆனால் தற்போது மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் உள்ள தென் மாவட்டங்களில் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே டிசம்பர் 30-ம் தேதி தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த கனமழையானது கிழக்கு திசை மற்றும் காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கனமழை எச்சரிக்கை
இதையும் படியுங்கள்: கனமழை எச்சரிக்கை: அடுத்த ஒரு வாரத்திற்கு..! வானிலை ஆய்வு மையம் தகவல்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular