HomeHow toகிசான் கிரெடிட் கார்டு..! விண்ணப்பிப்பது எப்படி? How to Apply for Kisan Credit Card..?

கிசான் கிரெடிட் கார்டு..! விண்ணப்பிப்பது எப்படி? How to Apply for Kisan Credit Card..?

கிசான் கிரெடிட் கார்டு என்பது இந்திய அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டை ஆகும். இந்த அட்டையை அறிமுகப்படுத்தியதன் முக்கிய நோக்கம் விவசாயிகள் தங்களின் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மத்திய அரசிடம் நிதி உதவி பெறுவது ஆகும்.

KCC full form Kisan Credit Card. இத்திட்டம் விவசாயிகளுக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் வழங்கும் நேக்கத்துடன் 1988 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இது விவசாயம் தொடர்பான பணிகளுக்கு மிக குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் திட்டமாகும். விவசாயி கடன் பெற்ற பயிரின் அறுவடை காலத்தை பொருத்து, கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் அவகாசம் நீடிக்கப்படும் என்பது இந்த திட்டத்தின் சிறப்பாகும். இந்த கிசான் கிரெடிட் கார்டு பெறுவது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

KCC திட்டத்தின் மூலம் பயன் பெறுபவர்கள்

KCC Scheme மூலம் தற்போது விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களும் கடன் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் குறுகிய கால கடன்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி கொள்ளலாம்.

கடன் பெற விரும்பும் விவசாயிகள் வங்கிக்கு நேரில் சென்று தங்கள் நிலத்திற்குரிய ஆவணங்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் மற்றும் வங்கி கேட்கும் பிற ஆவணங்கள் போன்றவற்றை சமர்ப்பிப்பதன் மூலம் Kisan Registration செய்யலாம். பிறகு, கடன் தொகை பெற இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகும். ஒரு விவசாயி கடன் தொகையாக 3 லட்சம் ரூபாய் வரை பெற முடியும். கடன் பெறுபவரின் வயது 18 முதல் 75 வயது வரை இருக்கலாம். ஆனால் 60 வயதுக்கு மேலுள்ள விவசாயிக்கு, இணை விண்ணப்பதாரர் இருப்பது கட்டாயம் ஆகும்.

Kisan Credit Card விண்ணப்பிப்பது எப்படி?

நபார்ட் (NABARD), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank), பாங்க் ஆப் இந்தியா (Bank of India), ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் வங்கி (Axis Bank), பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank) மற்றும் ஐ.டி.பி.ஐ (IDBI) ஆகிய வங்கிகள் கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன. இந்த வங்கிகளில் ஆன்லைன் மூலமும் Kisan Credit Card Apply செய்யலாம்.

  • மேலுள்ள கொடுக்கப்பட்டுள்ள வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று, அதில் “KCC -க்கு விண்ணப்பிக்கவும்” என்ற option-ஐ Search பண்ணி Click செய்யவும்.
  • கிளிக் செய்த பிறகு, தேவையான விவரங்களை KCC -ன் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யவும்.
  • பிறகு பூர்த்தி செய்யப்பட்ட KCC படிவத்தை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளையில் சமர்ப்பிக்க வேண்டும், வங்கி அதிகாரிகள் உங்கள் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்வார்.
  • உங்கள் விண்ணப்பத்திற்கான கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கிசான் கிரெடிட் கார்டு உங்களுக்கு அனுப்பப்படும். குறைந்தது 15 நாட்களுக்குள் கிசான் கிரெடிட் கார்டு கிடைத்துவிடும்.

கிசான் கிரெடிட் கார்டின் மூலம் ஒரு விவசாயி, குறுகிய காலத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுகொள்ளலாம். ஒரு லட்சத்துக்கும் மேல் கடன் வாங்கிய விவசாயி தனது நிலத்தை அடமானம் வைக்க வேண்டும். இந்த கடனுக்கு வட்டியாக 7 சதவீதம் செலுத்த வேண்டும். ஆனால் விவசாயி கடனை சரியான நேரத்தில் செலுத்தினால், அவருக்கு வட்டியில் மூன்று சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, அவர் 4 சதவீதம் வட்டி மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular