Homeலைஃப்ஸ்டைல்Gold Jewelry Cleaner: உங்க பழைய தங்கம் புதுசு மாதிரி ஜொலிக்கணுமா? இதை பண்ணுங்க போதும்..!

Gold Jewelry Cleaner: உங்க பழைய தங்கம் புதுசு மாதிரி ஜொலிக்கணுமா? இதை பண்ணுங்க போதும்..!

Gold Jewelry Cleaner: தங்கத்தால் ஆன நகைகள் அனைவரும் போட்டுக்கொள்வோம். இது சற்று விலையுர்ந்ததாக இருந்தாலும், தங்கம் மீது மக்களுக்கு உள்ள மோகம் குறையவில்லை என்று தான் கூறவேண்டும். காரணம் தங்கத்தை வெறும் அலங்கார பொருளாக மட்டும் பார்ப்பதில்லை. அதன் மீது முதலீடு செய்வதும், சேமித்து வைத்தால் நமக்கு கஷ்டமான காலங்களில் உதவியாக இருக்கும் என்பதற்காகவும் தான். தங்க நகைகள் பெரும்பாலும் பெண்கள் விருப்பப்பட்டு (How to Clean Gold Jewelry in Tamil) பெண்கள் அணிந்துக்கொண்டாலும், ஆண்களும் தங்க நகைகள் விரும்பி அணிந்துக்கொள்கிறார்கள் என்று தான் கூறவேண்டும்.

தங்க நகைகள் மீது ஆண்களுக்கும் தனி விருப்பம் உண்டு. தங்கத்தை நாம் முதல் முறையாக வாங்கும் போது இருந்த அதே ஜொலிப்பு கடைசி வரை இருப்பதில்லை. காரணம் நம் அதை உடலில் அணிந்துக்கொள்வதால் அதன் தன்மை மாறிவிடுகிறது. ஆனால் அதன் மதிப்பு அப்படியே தான் இருக்கும். ஆனால் பார்பதற்கு பழைய தங்கம் போன்று அழகாக இருக்காது. காரணம் நாம் தங்க நகைகளை உடலில் அணிந்திருப்பதால் நம் உடல் சூட்டின் காரணமாக அது கருத்துவிடும். தங்கம் நம் உடலின் சூட்டை குறைக்கும். அது மட்டுமல்லாமல் அதன் நிறம் மாறிவிடும். அதை நாம் அணிந்துக்கொண்டால் பார்ப்பதற்கு எடுப்பாக இருக்காது. நாம் இந்த பதிவில் நகைகளின் நிறம் மாறினால், தங்கம் தேயாமல் அதை எப்படி சுத்தம் (How to Clean Gold Jewelry at Home in Tamil) செய்யலாம் என்று பார்க்கலாம்.

சுத்தம் செய்யும் முறை – Gold Jewelry Cleaner in Tamil

1. வெதுவெதுப்பான நீர்

ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும், அடுப்பை அணைத்த பிறகு கீழே இறக்கி வைக்க வேண்டும்.அதில் நாம் உணவிற்கு பயன்படுத்தும் சோடா உப்பு (How to Clean Gold Jewelry With Baking Soda in Tamil) மற்றும் ஷாம்பு ஆகியவற்றை அதில் சிறிதளவு போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு அதை நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். அதில் நீங்கள் எந்த நகையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை அதில் ஊறவைக்க வேண்டும். ப்ரஷ் எதையும் கொண்டு அதை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டாம்.

ஏனெனில் ப்ரஷ் வைத்து சுத்தம் செய்தால் சிறிய நகைகளாக இருந்தால் சேதமடைந்து விடும். இதனால் நீங்கள் அதை அப்படியே அதில் ஊறவைத்தால் அதன் நிறம் மாறி புதிது போல ஜொலிக்கும். பிறகு அந்த நகைகளை எடுத்து டிஸ்யூ பேப்பர் கொண்டு மென்மையாக துடைக்க வேண்டும். அல்லது காட்டன் துணி கொண்டு மெதுவாக துடைக்க வேண்டும். வேகமாக துடைத்தால் நகை சேதமடைய வாய்ப்புள்ளது.

2. டூத் பேஸ்ட் முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும், அடுப்பை அணைத்த பிறகு கீழே இறக்கி வைக்க வேண்டும். அதில் நீங்கள் எந்த நகையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை அதில் ஊறவைக்க வேண்டும்.

Gold Jewelry Cleaner

சிறிதளவு பேஸ்ட் (How to Clean Gold Jewelry With Toothpaste in Tamil) எடுத்து அந்த நகையின் மீது தடவ வேண்டும். பிறகு மெதுவாக அதனை சுத்தம் செய்ய வேண்டும். அழுத்தமாக தேய்க்காமல் மெதுவாக தேய்க வேண்டும். மீண்டும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட வேண்டும். மீண்டும் நகையை எடுத்து தேய்க வேண்டும். தற்போது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா உங்கள் தங்கத்தை சுத்தம் செய்வதற்கான இயற்கையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியாகும். உங்கள் தங்க நகைகளை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் சோடா, டிஷ் சோப்பு கரைசலைப் பயன்படுத்தலாம். உங்கள் தங்கத்தை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை கொதிக்கும் நீரையும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: சமையல் உப்பு ஈரப்பதம் இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? Tips for Keeping Salt Dry in Tamil..!

எலுமிச்சை தங்கத்தை சுத்தம் செய்யுமா?

தங்கத்தை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் (How to Clean Gold Jewelry With Vinegar) கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில் அவை அதிக அமிலத்தன்மை கொண்டவை மற்றும் மிகவும் பாதுகாப்பற்றவை. இதனால் தங்க நகைகளுக்கு சேதம் ஏற்படலாம். ஒருபோதும் எலுமிச்சையை தங்க நகைகள் மீது உபயோகிக்க வேண்டாம்.

ஆல்கஹால் கொண்டு நகைகளை சுத்தம் செய்ய முடியுமா?

நகைகளை சுத்தம் செய்வதற்கு ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்யலாமா (Can You Clean Jewelry with Alcohol) என்றால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ரத்தினக் கற்கள் கொண்ட நகைகளுக்கு ஆல்கஹால் பொருத்தமானதாக இருக்காது. ஏனெனில் இது தோற்றம் அல்லது நிறத்திற்கு, மற்றும் அதன் மதிப்பிற்கு தீங்கு விளைவிக்கும். முக்கியமாக ஆல்கஹால் கொண்டு வெள்ளி அல்லது தங்க நகைகளை சுத்தம் செய்வதால் நிறமாற்றம் ஏற்படலாம். அதனால் ஆல்கஹால் கொண்டு தங்க நகைகளை சுத்தம் (Thanga Nagai Sutham Seivathu Eppadi) செய்ய முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

கற்கள் உள்ள நகைகளை எவ்வாறு சுத்தம் செய்வது Gold Jewelry Cleaner

Clean Gold Jewelry in Tamil
  • பொதுவாக தங்க நகைகளில் கற்கள் (How to Clean Gold Rings With Stones IN Tamil) வைத்து நகைகள் தயாரிக்கப்பட்டிருக்கும். இந்தவகையான நகைகளை சுத்தம் செய்வதற்கு சிறிதளவு வெந்நீரில் மூழ்கும்படி போட்டு அதில் சிறிதளவு சோப்பு பவுடரை போட்டால் போதும். அதனை ப்ரஷ் கொண்டு தேய்க்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு சோப்பு தூள் போட்டு வெந்நீரில் மூழ்கும்படி வைத்தாலே போதும். அதில் உள்ள அழுக்குகள், கருமை நிறங்கள் என அனைத்தும் மறைந்துவிடும்.
  • பிறகு அதனை எடுத்து மெதுவாக ஒரு காட்டன் துணி கொண்டு துடைக்க வேண்டும். அழுத்தி துடைக்காமல் பொறுமையாக ஒத்தி வைத்து எடுத்தால் போதும். அழுத்தி துடைத்தால் அதில் உள்ள கற்கள் சேதமடைய வாய்ப்புள்ளது.
  • முக்கியமாக கற்கள் அதிகமாக உள்ள நகைகளை சுத்தம் செய்யும் போது நிபுணர்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் அவர்கள் அதில் அனுபவம் உள்ளதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அதனை சுத்தம் செய்து கொடுப்பார்கள்.
மேலும் படிக்க: Navratna Stones in Tamil: நவரத்தின மோதிரம் அணிந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்..!

தங்க நகைகளை சுத்தமாக வைத்திருக்க டிப்ஸ்

Gold Jewelry Cleaner in Tamil
  • பொதுவாக நாம் அணிந்திருக்கும் தங்க ஜெயின் மற்றும் காதணிகள் அதிகமாக நிறம் மாறி வரும். அதற்கு முக்கிய காரணம் பார்த்தால் நாம் குளிக்கும் போது அதில் சோப்பு தங்கிவிடும். இதனை தடுக்க நீங்கள் தங்க நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிக்கலாம். இதன் மூலம் நிறம் மாறுவதை சற்று குறைக்கலாம்.
  • நாம் அதிகமாக வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்தும் போது தங்க நகைகள் மீது பட்டால் அதன் நிறம் மாறிவிடும்.
  • நீங்கள் வழக்கமாக அணிந்திருக்கும் தங்க நகைகளை வாரத்திற்கு ஒரு முறை கழற்றி மென்மையான துணிகள் கொண்டு துடைத்தால் அதில் அழுக்கு படியாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
  • அணிந்திருக்கும் நகைகளை தவிர மற்ற நகைகள் வீட்டில் இருந்தால் அதை ஒரு காட்டன் துணி கொண்டு சுற்றி, பாதுகாப்பான ஒரு பெட்டியில் வைத்துவிட்டால் அதில் அழுக்கு படாமல் இருக்கும்.
  • நீச்சல் குளம் போன்றவற்றில் நீச்சல் பயிற்சி எடுத்துக்கொள்பவர்கள், தங்க நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிக்கலாம். ஏனெனில் அதில் உள்ள இரசாயனங்களினால் உங்கள் தங்க நகைகள் சேதமடையும்.
  • தங்க நகைகள் பொதுவாக லட்சுமி கடாஷம் உள்ள ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. இதுபோன்று அழுக்கு அதில் படியவிட்டால் நல்லதல்ல. இதனால் தங்க நகைகளை முடிந்த அளவிற்கு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: Kitchen Tips: இத மட்டும் பண்ணுங்க போதும்..! அப்புறம் ஒரு எறும்பு, கரப்பான் பூச்சி கூட வராது..

Gold Jewelry CleanerFAQS

1. எனது தங்கத்தை மீண்டும் பளபளப்பாக மாற்றுவது எப்படி? How can I make my gold shiny again?

மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். பெரும்பாலான தங்க நகைகளை சுத்தம் செய்வதற்கு வெதுவெதுப்பான நீர், பாத்திர சோப்பு மற்றும் மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்கும் ப்ரஷ் மட்டுமே தேவை.

2. சிறந்த வீட்டில் தங்கத்தை சுத்தம் செய்வது எது?

டிஷ் டிடர்ஜென்ட் மற்றும் வெதுவெதுப்பான நீர் இருந்தால் போதும். சில மணி நேரங்களிலேயே தங்கத்தை சுத்தம் செய்துவிடலாம்.

3. தங்கத்தை தண்ணீரில் கழுவுவது சரியா? Is it OK to wash gold with water?

உங்கள் தங்கத்தை சுத்தம் செய்ய தண்ணீர் பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், தண்ணீர் வெதுவெதுப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சூடான நீர் தங்கத்திற்கு மோசமானது. ஏனெனில் உலோகம் விரிவடையும். அதேபோல், குளிர்ந்த நீர் அதை சுருங்கச் செய்யலாம்.

4. பேக்கிங் சோடா தங்கத்தை சேதப்படுத்துமா? Does baking soda damage gold?

தங்கத்தில் பற்பசை, பேக்கிங் சோடா அல்லது வணிக ரீதியான கிளீனரை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இந்த உராய்வை நீங்கள் பயன்படுத்தினால், இதனை பயன்படுத்தி தங்கத்தை சுத்தம் செய்யும் போது நீங்கள் தங்கத்தை கீறலாம்.

5. ஒரே இரவில் நகைகளை வினிகரில் விட முடியுமா? Can you leave jewelry in vinegar overnight?

வினிகரை 5 நிமிடங்களுக்கு மெதுவாக தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைக்கவும். பிறகு வேண்டுமானால் நகைகளை அதில் போட்டு சுத்தம் செய்யலாம். ஆனால் வினிகரை பயன்படுத்துவது நல்லதல்ல.

6. சோப்பினால் தங்கம் பாதிக்கப்படுமா? Is gold affected by soap?

சோப்பினால் தங்கம் அதிக அளவு பாதிக்கப்படாது. ஆனால் ஒரு சில இரசாயனங்கள் அதிகம் கலந்துள்ள சோப்புகளினால் தங்கம் பாதிக்கலாம்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular