HomeHow toஇனி வில்லங்கம் இல்லாமல் வில்லங்க சான்றிதழை பெற முடியும்..! How to Download EC Online...

இனி வில்லங்கம் இல்லாமல் வில்லங்க சான்றிதழை பெற முடியும்..! How to Download EC Online in Tamil..!

EC Online in Tamil என்ன என்பதை பற்றி நமது வலைதளத்தில் பார்க்க உள்ளோம். ஒருவர் ஒரு மனை வாங்குபோதோ அல்லது வீடு வாங்கும்போதோ அதற்கு பட்டா, சிட்டா இருக்கிறதா என பார்ப்போம். அதுபோல தான் ஒரு சிலர் ஒரு சொத்தை வாங்க போகிறார் என்றார் அந்த சொத்திற்கு வில்லங்கம் பார்த்துவிட்டீர்களா? வில்லங்கம் ஏதாவது இருக்கப்போகிறது? என கேட்பார்கள். வில்லங்கம் சான்றிதழ் என்றால் என்ன? உண்மையில் வில்லங்க சான்றிதழ் வில்லங்கமானது தானா? என இந்த பதிவில் நாம் How to Get Villangam Certificate என்பதை காண்போம்.

வில்லங்க சான்றிதழ் என்றால் என்ன?Encumbrance Certificate Tamilnadu Online

இந்த வில்லங்க சான்றிதழை (EC: Encumbrance Certificate) என்று கூறுகிறோம். ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாக உள்ளது. சம்பந்தப்பட்ட சொத்து யார் பெயரில் இருக்கிறது என்பதையும், ஒரு சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, இதற்கு முன்பு யார்யார் கைகளில் சொத்து மாறியது என்பதைக் காட்டும் ஒரு பதிவு ஆவணம். இந்த ஆவணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வாங்க முடியும்.

இந்த வில்லங்கச் சான்றிதழில் அந்த சொத்து பதிவுத்துறையால் பதிவு செய்யப்பட்ட தேதி, யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது, சர்வே எண், சொத்தின் அளவு, உட்பிரிவு எண் போன்றவை அதில் பதிவிடப்பட்டிருக்கும். இதன் மூலம் அந்த சொத்துக்கு யார் உரிமையாளர் போன்ற முழு வில்லங்கத்தையும் முழுமையாக நம்மால் அறிந்துக்கொள்ள முடியும்.

ஒரு அசையா சொத்தின் மீது வங்கியில் கடன் வாங்குவதற்கு இந்த வில்லங்க சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த வில்லங்க சான்றிதழை தற்போது ஆன்லைனில் எளிமையாக டவுன்லோட் (EC View Online Tamilnadu in Tamil) செய்துக்கொள்ளலாம். முன்பெல்லாம் பத்திர பதிவு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று இதனை பெற்று வந்த நிலையில் தற்போது அரசு இதற்கென ஒரு இணையவழி சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் இலவசமாக (Online EC View) நம்முடைய வில்லங்க சான்றிதழை டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் 1950 முதல் இன்றைய காலம் வரையிலான வில்லங்க சான்றிதழ்களை (Villangam Sandru Online) ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.

EC Documents Download Online in Tamil

Step1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

முதலில் அதிகாரப்பூர்வ tnreginet இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

Step2: மின்னணு சேவைகள் என்ற ஆப்சனுக்க செல்லவும்.

encumbrance certificate tamilnadu online

அதிகாரப்பூர்வ இணையதளம் சென்ற பிறகு அதில் நிறைய ஆப்சன்கள் காண்பிக்கப்படும். அதில் மின்னணு சேவைகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step3: வில்லங்கச் சான்று என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

online ec view

மின்னணு சேவைகள் என்பததை கிளிக் செய்த பிறகு அதில் வில்லங்கச் சான்று என்ற ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கிளிக் செய்த பின்பு வில்லங்கம் சான்று, விவரம், பார்வையிடுதல் என்று காண்பிக்கப்படும். அதில் வில்லங்கச் சான்று என்று கொடுக்க வேண்டும்.

Step4: வில்லங்கச் சான்று என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ec certificate download

அதனை கிளிக் செய்த பிறகு 3 வகையான ஆப்சன்கள் காண்பிக்கப்படும். அதில் முதலாகவதாக உள்ள வில்லங்கச் சான்று என்பதை கொடுத்து கீழே காண்பிக்கப்படும் மண்டலம், மாவட்டம், புல விவரங்களை கொடுக்க வேண்டும். பின்பு கேப்சாவை உள்ளிட்ட பிறகு தேடுக என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step5: பதிவிறக்கம் என்பதை கொடுக்க வேண்டும்.

ec view online tamilnadu

தற்போது திருத்த இயலாதநிலை ஆவணத்தை பதிவிறக்கம் செய்ய என்பதை கொடுத்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Step6: ஆவணம் வாரியாக என்பதை தேர்வு செய்ய வேண்டும்

tnreginet ec view online
  • இரண்டாவதாக ஆவணம் வாரியாக என்பதை கொடுக்க வேண்டும். அதனை கொடுத்த பிறகு எந்த இடத்தில் உள்ள சொத்திற்கு வில்லங்கச் சான்றிதழ் பெற வேண்டுமோ அந்த இடத்திற்கு உரிய சார்பதிவாளர் அலுவலகம், ஆவண எண் எந்த வருடத்தில் இருந்து எந்த வருடம் வரை வில்லங்க சான்றிதழ் தேவைப்படுகிறதோ அது வரை தேதியை குறிப்பிட்டு தேடுக என்பதை கொடுக்க வேண்டும்.
  • பிறகு பதிவிறக்கவும் என்ற சிவப்பு கலர் ஆப்சன் காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்து டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: பட்டா சிட்டா என்றால் என்ன? ஆன்லைனில் பெறுவது எப்படி? Patta Chitta in Tamil..!

EC – FAQS

1. EC சான்றிதழ் யாரெல்லாம் பெற முடியும்? Who can by ec certificate in Tamilnadu?

யார் வேண்டுமானாலும் வில்லங்க சான்றிதழை பெறலாம். சார்பதிவாளர் அலுவலகம் சென்று சொத்தினுடைய விவரங்களை கொடுத்தும், அல்லது இணையதளத்தில் விவரங்களை கொடுத்து சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

2. EC சான்றிதழின் பயன் என்ன? What is the use of EC certificate?

வில்லங்க சான்றிதழ் மூலம் அந்த சொத்து அடமானம் வைக்கப்பட்டுள்ளதா அல்லது ஏதேனும் சட்டப் பாக்கிகள் உள்ளதா என்பதைக் குறிக்கும்.

3. EC சான்றிதழ் எவ்வளவு காலம் செல்லுபடியாகும்? How long is EC certificate valid?

செல்லுபடியாகும் காலம் 30 ஆண்டுகள் வரை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான ECயை நீங்கள் கேட்டால், அந்த காலக்கெடுவுக்கான தகவலை மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular