HomeHow toFMB என்றால் என்ன? How to Download FMB Map in Online tamilnadu..!

FMB என்றால் என்ன? How to Download FMB Map in Online tamilnadu..!

FMB Map in Online tamilnadu பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பொதுவாக நாம் ஒரு நிலம் வாங்கும்போதோ அல்லது நம்முடைய நிலத்தை விற்கும்போதோ இந்த பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கம் சான்றிதழ், FMB போன்ற வார்த்தைகளை கேள்விப்பட்டிருப்போம். FMB (Field Measurement Book) என்பது ஒரு நிலத்திற்குரிய பல தகவல்களின் வரைபடம் ஆகும். இதில் அளவுகள் மற்றும் சரியான பரப்பளவு, சர்வே நம்பர், உட்பிரிவு, அந்த நிலத்தில் நீர் வசதி, நடைபாதை, கிணறு போன்ற அனைத்து தகவல்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வரைபடத்தை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலகம் அல்லது வருவாய்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நில வரைபடத்தை நாம் இணையதளத்தில் எளிமையாக டவுன்லோட் செய்துக்கொள்ள முடியும். இது நிலஅளவியர் மூலம் அளவீடு செய்யப்பட்டு வரையப்படும் நிலவரைபடம் ஆகும். FMB நிலவரைபடத்தின் மூலம் ஒருவருடைய நிலத்தின் வரைபடத்தினை கொண்டு அந்த நிலத்திற்கு மேற்கே என்ன உள்ளது, கிழக்கே என்ன உள்ளது போன்ற தகவல்களை நம்மால் பெற முடியும்.

FMB வேறு பெயர்கள் FMB Map in Online tamilnadu

  • நில வரைபடம்
  • புலப்படம்
  • நிலப்படம்
  • புல அளவீட்டுப் புத்தகம்

FMB sketch online tamilnadu

step1: அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல வேண்டும்.

முதலில் அதிகாரப்பூர்வ eservices.tn.gov.in இணையதளத்திற்கு முதலில் செல்லவும்.

step2: submit என்பதை கொடுக்கவும்.

fmb sketch online tamilnadu

மேலே கொடுக்கப்பட்ட District, Area Type போன்றவற்றை கொடுக்க வேண்டும். சரியாக கொடுத்த பிறகு Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step3: Submit என்பதை கொடுக்கவும்.

fmb sketch online
  • அதன் பிறகு மீண்டும் District, Taluk, Village, Survay number, Sub Divisition Number, போன்றவற்றை கொடுக்க வேண்டும். கொடுத்த பின்பு கேப்சாவை உள்ளிட வேண்டும். அதன் பிறகு Submit என்பதை கொடுக்கவும்.
  • பிறகு View FMB என்பதை கொடுக்க கிளிக் செய்ய வேண்டும்.

Step4: டவுன்லோடு செய்ய வேண்டும்.

fmb sketch download tamilnadu

தற்போது உங்களுடைய fmb sketch டவுன்லோட் செய்யப்பட்டது. அதனை நீங்கள் Print எடுத்துக்கொள்ளலாம். இது போன்று நீங்கள் ஆன்லைனில் fmb sketch online டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: இனி வில்லங்கம் இல்லாமல் வில்லங்க சான்றிதழை பெற முடியும்..! How to Download EC Online in Tamil..!

FMB Sketch – FAQ

1. FMB இன் நோக்கம் என்ன? What is the Purpose of FMB?

நில வரைபடம் (FMB) என்பது உங்கள் பகுதியில் உள்ள நிலப் பரிமாணங்களின் வரைபட அடிப்படையிலான பதிவாகும். இது ஒரு நிலம் தொடர்பான பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளது. இது தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலகம் அல்லது வருவாய்த்துறையால் பராமரிக்கப்படுகிறது.

2. தமிழ்நாட்டில் எனது FMB ஐ எவ்வாறு சரிசெய்வது? How can I correct my FMB in Tamil Nadu?

FMB-யை சரியாக அமைக்க கோரி தாசில்தாரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நிலத்தை அளந்து அளவீடு செய்த பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் FMB-யில் திருத்தம் செய்வார்கள்.

3. தமிழ்நாட்டில் பழைய FMB ஐ எவ்வாறு பெறுவது? How can I get old FMB in Tamil Nadu?

சொத்தின் நில உரிமையாளர் fmb sketch-ஐ தாசில்தார் அலுவலகத்தில் இருந்து எளிதாகப் பெறலாம். எனவே, சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் நேரில் சென்று கேட்டு பெறலாம். FMB sketch கிடைக்கவில்லை அல்லது காலாவதியானால், சொத்தின் கணக்கெடுப்புக்கு கோரிக்கை வைக்கலாம்.

மேலும் படிக்க: பட்டா சிட்டா என்றால் என்ன? ஆன்லைனில் பெறுவது எப்படி? Patta Chitta in Tamil..!

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular