Homeசெய்திகள்இதய திருடன் பட நடிகை.. காம்னா நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

இதய திருடன் பட நடிகை.. காம்னா நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் இதய திருடன் (Idhaya Thirudan Movie Actress Kamna)படத்தின் நாயகி காம்னா. இவர் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேமிழுலு என்ற படத்தின் மூலம் தனது சினமா வாழ்க்கையை ஆரம்பித்தவர் தான் நடிகை காம்னா. அதே ஆண்டு 2005 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தமிழ் சினிமாத்துறையில் முதன்முதலாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதய திருடன் (Idhaya Thirudan Movie Actress Kamna Recent Picture) படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் தான் அவர் ஹீரோயினாகும் முதல் தமிழ் படம்.

இந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது என்றே கூறலாம். அந்த படம் வெளிவந்த சமயம் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த காம்னாவிற்கு பட வாய்ப்புகள் தேடிவந்தன. இவர் தெலுங்கிலும் மிகவும் பிஸியாக நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான மச்சக்காரன், ராஜாதி தாஜா, காசேதான் கடவுளடா ஆகிய திரைப்படங்களில் நடித்தார் காம்னா.

தமிழ் மற்றும் தெலுங்கில் 18 ஆண்டுகள் பயணித்த காம்னா தற்போது வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சூரஜ் நாக்பால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் சினிமாவில் நடித்து வந்தார்

தற்போது நடிகை காம்னாவின் தற்போதைய புகைப்படங்கள் (Actress kamna recent picture) சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இவர் நடிகை காம்னாவா என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Idhaya Thirudan Movie Actress Kamna Recent Picture
மேலும் படிக்க: கல்லூரி படம் ஷோபனாவை நினைவிருக்கா? கல்லூரியின் நினைவுகளை பகிர்ந்த தமன்னா..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular