Homeசெய்திகள்பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி சிறை தண்டனை...!

பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் இனி சிறை தண்டனை…!

இனி 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று இரமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியால் பெரும்பாலான இடங்களில் 10 Rupees Coin வாங்க மறுக்கிறார்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்நிலையில் தான் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது பண பரிமாற்றத்தின் போது 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதோ அல்லது பெற மறுப்பதோ சட்டப்படி குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.

Pathu Rupai Coin

இந்திய அரசால் வழங்கப்பட்டு கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும். ஆனால் அவற்றை வாங்க மறுத்தால் இந்திய தண்டனைச் சட்டம் 124A-ன் படி அவருக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படும்.

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகளை பற்றி பொதுமக்கள் புகார் கொடுத்தால் உடனடியாக கடை மீதும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular