Homeசெய்திகள்நேபாளத்திற்கு உதவிகளை வழங்க இந்தியா தயார்..! பிரதமர் மோடி உறுதி..!

நேபாளத்திற்கு உதவிகளை வழங்க இந்தியா தயார்..! பிரதமர் மோடி உறுதி..!

நேபாளத்தில் நேற்றிரவு 11.32 மணியளவில் காத்மாண்டு என்ற பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 130-க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயர்ந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த துயரத்தில் இருந்து மீள நேபாளுக்கு இந்தியா துணையாக இருக்கும் என Prime Minister Narendra Modi தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி X தளத்தில் பதிவிட்டுள்ளது

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். Nepal மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது மற்றும் இந்தியா நேபாளத்திற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. எங்களுடைய எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி தனது X தள பக்கத்தில் கூறியுள்ளார்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular