Homeசெய்திகள்உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர்..!

உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர்..!

கத்தாா் மாஸ்டர்ஸ் செஸ்ஸில் (Qatar Masters Chess) உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்திய வீரர் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன் முரளி.

கத்தாரில் நடைபெற்று வரும் மாஸ்டர் செஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த கார்த்திகேயன் முரளி உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

6-சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 7-வது சுற்று போட்டியில் உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் கார்திகேயன் முரளி எதிர்க்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மேக்ஸ்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் கார்த்திகேயன் முரளி. இதன் மூலம் இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி 7க்கு 5.5 என்ற புள்ளிகளுடன் முன்னிணியில் உள்ளார்.

கார்த்திகேயன் முரளி உலகக் கோப்பையின் இளைய இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆவார். உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வென்ற 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன் Indian Chess Grandmaster விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பெண்ட்ல ஹரிகிருஷ்ணா ஆகியோர் கார்ல்சனை வீழ்த்தியுள்ளனா். விஸ்வநாதன் ஆனந்த், மேக்னஸ் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன் ஆன பிறகு தான் அவரை வீழ்த்தினார். இந்த வரிசையில் தற்போது கார்த்திகேயன் முரளி இணைந்துள்ளார். இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular