Homeசெய்திகள்உலகின் நீளமான கூந்தலுக்கான கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்..!

உலகின் நீளமான கூந்தலுக்கான கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்..!

ஒவ்வொரு நாளும் பலரால் பலவகையான உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டு தான் வருகின்றன. தற்போது இந்த வரிசையில் உலகின் நீளமான கூந்தல் கொண்ட பெண் என்ற சாதனையை உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் உள்ள உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா வயது 46. இந்த பெண் உலகின் மிக நீளமான தலைமுடியைக் கொண்ட நபர் என்ற கின்னஸ் உலக சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியுள்ளார்.

இவர் தனது 14 வயது முதல் தனது தலைமுடியை பராமரித்து வருகிறார். இவர் தன் 14 வயது முதலே தலைமுடியை வெட்டுவதைத் தவிர்த்துள்ளார். 1980 முதல் இந்தி நடிகைகளின் சிகை அலங்காரங்களால் ஈர்க்கப்பட்ட இவர் தனது நீளமான கூந்தலை பராமரிப்பதற்காக பல அர்ப்பணிப்புகளை செய்துள்ளார். அந்த அர்ப்பணிப்புகள் தான் தற்போது இவருக்கு சாதனை புத்தகங்களில் ஒரு இடத்தைப் பெற்றுத்தந்துள்ளது.

“இந்திய கலாச்சாரத்தின் படி, தெய்வங்கள் மிகவும் நீளமான முடியைக் கொண்டிருக்கின்றனர். எனவே நம் சமூகத்தில், முடி வெட்டுவது அபசகுணமாக கருதப்படுகிறது எனவும் அதனால்தான் பெண்கள் முடி வளர்க்கிறார்கள் எனவும் ஸ்மிதா கூறியுள்ளார்.

Smita Long Hair Women

அதுமட்டுமின்றி கின்னஸ் உலக சாதனையின் படி, ஸ்மிதா தன் கூந்தலை வாரத்திற்கு இரண்டு முறை அலசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுபோன்ற கூந்தல் பராமரிப்புகளான கழுவுதல், உலர்த்துதல், அகற்றுதல் மற்றும் ஸ்டைலிங் உட்பட முழு செயல்முறையும் செய்ய மூன்று மணிநேரம் வரை எடுக்கும் எனவும் கூறியுள்ளார். அவர் தலை முடியை அலசுவதற்கு 30-45 நிமிடங்கள் ஆகும் எனவும், பின்னர் அதை ஒரு துண்டு வைத்து உலர்த்துகிறார், இதனை செய்து முடிக்க பொதுவாக இரண்டு மணிநேரம் ஆகிறது என்று கூறியுள்ளார்.

மக்கள் என்னிடம் வந்து என் தலைமுடியைத் தொட்டு புகைப்படம் எடுக்கிறார்கள், என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள், என் தலைமுடி அழகாக இருப்பதால் நான் பயன்படுத்தும் பொருட்களைப் பற்றி அடிக்கடி விசாரிப்பார்கள். எனது தலைமுடிக்கு நான் என்ன பயன்படுத்துகிறேன் என்பதை நான் அவர்களிடம் கூறுகிறேன்.

ஸ்மிதா, இது தன் கனவு எனவும், இந்த கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை இப்போது கைப்பற்றியதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.

ஸ்மிதா தனது தலைமுடியை சீவிக்கொண்டு வெளியில் செல்லும்போதெல்லாம், பார்ப்பவர்கள் “ஆச்சரியப்படுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இவ்வளவு நீளமான முடி இருப்பதை மக்கள் புரிந்துகொள்வது கடினம் தான் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular