Homeவிளையாட்டுவரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..! என்ன நடந்தது?

வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..! என்ன நடந்தது?

கிரிக்கெட் என்றாலே பிரபலமான விளையாட்டு என்பது நாம் அறிந்த ஒன்றே. தற்போது ஆடவர் அணிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய மகளிர் அணிக்கும் அதே போல் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு ஏற்றார் போல இந்திய மகளிர் அணியும் பல வெற்றிகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி (Indian Women Cricket Team) முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 104.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 428 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அதிகபட்சமாக சுப் சதீஷ் 69, ரோட்ரிக்ஸ் (68), ஹர்மன்பிரீத் கவுர் (49), யாஸ்திகா பாட்டியா (66), தீப்தி ஷர்மா (67) ரன்கள் எடுத்தனர். மேலும் இங்கிலாந்து அணியில் லாரன் பெல், எக்லெஸ்டோன் ஆகியோர் தலா 3 விக்கெட்டை எடுத்தனர்.

அதன் பிறகு இங்கிலாந்து அணி களமிறங்கிறயது. இங்கிலாந்து அணி 35.3 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. இந்திய அணியின் தீப்தி சர்மா 5.3 ஓவரில் வீசினார், அதில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டை எடுத்தார்.

India vs England Match

இதனை தொடர்ந்து 292 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இருந்தது. அதன்பிறது தனது 2-வது இன்னிங்ஸில் (42) ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 478 ரன்கள் இலக்காக இருந்தது.

அதன் பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி 27.3 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து மொத்தம் 131 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 347 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த 2-வது இன்னிங்ஸில் திப்தி சர்மா 4 விக்கெட்டையும், பூஜா வஸ்த்ரகர் 3 விக்கெட்டையும் , ராஜேஸ்வரி கெய்க்வாட் 2 விக்கெட்டையும் எடுத்தனர்.

இப்போட்டியில் தீப்தி ஷர்மா மொத்தம் 39 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதேபோல் பேட்டிங்கில் 87 ரன்கள் குவித்துள்ளார். இதனால் இந்த போட்டிக்கான சிறந்த வீரர் விருதையும் அவர் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் பெண்கள் டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக அதிக ரன்கள் வித்தியாசத்தில இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
இதையும் படியுங்கள்: இந்திய அணியிலிருந்து விலகிய முக்கிய வீரர்… என்ன காரணம்?
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular