Homeவேலைவாய்ப்பு செய்திகள்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ. 48,000/- சம்பளத்தில் சூப்பரான வேலை... மிஸ்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ. 48,000/- சம்பளத்தில் சூப்பரான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கு உள்ள பல ஆசைகளில் முக்கியமான ஒன்று என்றால் அது படித்து முடித்த பிறகு ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான். ஆனால் அனைவருக்கு அது எளிதாக கிடைப்பது இல்லை. அதிலும் அரசு வேலைகள் என்றால் செல்லவே வேண்டாம். அதுபோல உள்ளவர்களுக்காக தான் தற்போது ஒரு அருமையான வாய்ப்பு வந்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நம்மில் பலரும் எப்படியாவது அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்பதற்காக பல விதமான முயற்ச்சிகளில் ஈடுபட்டு இருப்போம். இதுபோன்ற எண்ணம் உள்ளவர்களுக்காக தான் தற்போது IOCL Recruitment 2024 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் மற்றும் அவற்றிற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்பதிவில் பார்க்கலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் கீழ் காலியாக உள்ள Research Associate காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான IOCL Recruitment 2024 Official Notification அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த IOCL ஆட்சேர்ப்பு 2024 நடவடிக்கையின் படி காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இந்த IOCL Jobs Notification அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கான கல்வித்தகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், உயிரி தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல் வேதியியல், பகுப்பாய்வு அல்லது கனிமவியல் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பிஎச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித முன் அனுபவமும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL Recruitment 2024-ன் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான iocl.com-ல் வெளியாகியுள்ள satlewala@indianoil.in என்ற மெயில் ஐடிக்கு உங்களது Resume-ஐ அனுப்ப வேண்டும்.

இந்த IOCL Recruitment மூலம் நிரப்பப்படவுள்ள பதவிகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் உள்ளது. இதுகுறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Indian Oil Corporation Limited Recruitment 2024 காலிப்பணியிடங்களுக்கு 25.04.2024 முதல் 15.05.2024 (IOCL Recruitment Interview Date) வரை விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. IOCL நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள இந்த பணிகளுக்கு தற்போது மொத்தமாக 2 காலிப்பணியிடங்கள் (IOCL Job Vacancy) உள்ளன.

இந்த IOCL Jobs பதவிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அதிக பட்சமாக 40 வயதிற்கு மேல் இருக்ககூடாது. இந்த பணிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Research Associate பதவிகளுக்கான சம்பளம் ரூபாய் 48,000 இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த IOCL Velaivaippu 2024 குறித்த முழு தகவல்களுக்கு ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக பார்க்கவும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ. 48,000/- சம்பளத்தில் சூப்பரான வேலை... மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Salary: 48000

Salary Currency: INR

Payroll: MONTH

Date Posted: 2024-04-26

Posting Expiry Date: 2024-05-15

Employment Type : FULL_TIME

Hiring Organization : Indian Oil Corporation Limited

Organization URL: iocl.com

Organization Logo: https://infothalam.com/wp-content/uploads/2023/10/Infothalam-Social-Share.jpeg

Location: PostalAddress, Sadiq Nagar, J.B. Tito Marg, New Delhi, Delhi, 110049, India

Education Required:

  • Postgraduate Degree

இதையும் படியுங்கள்: இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு NLC நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular