Homeலைஃப்ஸ்டைல்Kamarajar History in Tamil..! காமராஜர் வாழ்க்கை வரலாறு..!

Kamarajar History in Tamil..! காமராஜர் வாழ்க்கை வரலாறு..!

Kamarajar History in Tamil:தமிழக அரசியலில் இதுவரை யாரும் இவரை போல் இருந்ததில்லை என்று கூறும் அளவிற்கு ஒரு அரசியல் தலைவர் இருந்தார் என்றால் அது காமராஜர் தான். இவரை பிடிக்காதவர்கள் என்று யாரும் இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் இவரின் ஆட்சி, மக்களுக்கு இவர் செய்த பல நல்ல திட்டங்கள் என்று இவரின் ஆட்சி பொற்காலம் என்று தான் கூறவேண்டும். அன்று பல குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கு சென்று படித்தததிற்கு இவரும் ஒரு காரணம் என்று தான் கூறவேண்டும்.

தமிழகத்தில் பல பள்ளிக்கூடங்களை கட்டி அதில் பல ஏழை பிள்ளைகளை படிக்க வைத்த பெருமை இவரை தான் சேரும். அதனால் தான் இவரை “கல்வி கண் திறந்த காமராஜர்” என்று அழைக்கப்பட்டார். காமராஜர் தன்னுடைய நலனை கருதாமல் மக்களுடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டார். தனது வாழ்நாள் முழுவதும் பிறருக்காகவே வாழ்ந்து திருமணம் கூட செய்து கொள்ளாமல் வாழ்ந்ததால் இவரை “தென்னாட்டு” காந்தி என்று அனைவரும் அழைத்தனர். kamarajar details in tamil பற்றி இந்த பதிவில் காண்போம்.

Table of Contents

காமராஜர் வாழ்க்கை வரலாறு Kamarajar Biography in Tamil

பிறப்புஜூலை மாதம் 15 ஆம் தேதி 1903 ஆம் வருடம் பிறந்தார்.
பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி கிராமம்
பெற்றோர் குமாரசாமி, சிவகாமி
படிப்பு குடும்ப நிலை காரணமாக படிக்கவில்லை
திருமணம் செய்துகொள்ளவில்லை
இறப்பு1975 , அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி

காமராஜரின் குழந்தை பருவம் Kamarajar Story in Tamil

kamarajar valkai varalaru: காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விருதுநகர் மாவட்டத்தின் விருதுப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார் (Kamarajar Birthday). இவர் பெற்றோர்கள் குமாரசாமி, சிவகாமி அம்மையார் ஆவரார்கள். இவர் சிறு வயதாக இருக்கும் போது இவரின் தந்தை இறந்துவிட்டார். இதனால் இவரின் பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. இவரின் தந்தை குமாரசாமி தனது குலதெய்வமான காமாட்சி அம்மனின் அருளால் தான் இவர் பிறந்துள்ளதால் இவருக்கு காமாட்சி என்று பெயர் வைத்தனர். இவரின் தயார் Kamarajar Parents இவரை ராசா என்று தான் அழைப்பார்.

பிறகு காமாட்சி என்ற பெயரும், ராசா என்ற பெயரும் சேர்ந்து காமராசு என்று அழைக்கப்பட்டார். இவரின் பள்ளி படிப்பை படித்துக் கொண்டிருக்கும் போது Kamaraj Achievements in Education in Tamil பள்ளியில் பொறுமையுடனும், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்துடனும் விளங்கி வந்தார் காமாராஜர். இவரின் தந்தை இறக்க பள்ளி படிப்பை தொடர முடியாமல் போயிற்று. இவரின் தாயார் சிவகாமிக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். ஒருவர் துணிகடை நடத்தி வந்துள்ளார். மற்றொருவர் மரக்கடை நடத்தி வந்துள்ளார். காமராஜர் குடும்ப நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்துள்ளார்.

விடுதலை உணர்வு – Kamarajar History in Tamil

துணிக்கடையில் வேலை பார்க்கும் போது பல தேசதலைவர்களின் குறிப்பாக திருவிக, பே.வரதராசுலு நாயுடு ஆகியோரின் விடுதலை பேச்சுகளில் கவரப்பட்டு பிரச்சாரங்களில் பங்கேற்பது, விடுதலை போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்தார். இதனால் தனது 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். கட்சியில் கொடி கட்டுவது முதல் கட்சிக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுவது முதல் என அனைத்தும் செய்து வந்தார். இவரின் கடின உழைப்பை பார்த்த காங்கிரஸ் கட்சி இவருக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை வழங்கி வந்தது.

காமராஜர் சிறை செல்லுதல்

காமராஜர் முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் அப்போதைய பொறுப்பாளராக இருந்த ராஜாஜியின் தலைமையில் 1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காமராஜர் ஆங்கிலயேர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அந்த சிறையில் 1 வருடம் சிறை தண்டனை அனுபவித்தார்.

பிறகு 1940 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு வெடிகுண்டு வெடிப்பில் காமராஜர் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அப்போது வரதராசு நாயுடுவின் வழக்காடும் திறமையில் காமராஜர் மீது சுமர்த்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

மீண்டும் 1940 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் 9 மாத காலம் சிறைவாசம் பெற்றார். பிறகு 1942- ஆம் ஆண்டு புரட்சி இயக்கத்தில் கலந்துகொண்டதால் இவர் 3 ஆண்டுகள் சிறை தண்டனைப் பெற்றார்.

காமராஜர் அரசியல் குரு மற்றும் தமிழக முதல்வர் பதவி

காமராஜர் தனது அரசியல் குருவாக காங்கிரஸ் கட்சியில் பேச்சாளரான சத்தியமூர்த்தியை தனது அரசியல் குருவாக ஏற்க்கொண்டார். அவரின் மீது காமராஜர் மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தார். சத்தியமூர்த்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானபோது காமராஜரை காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமித்தார்.

அப்போது ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் அனைவரின் மத்தியிலும் அவருக்கு எதிராக அமைந்தது. இதனால் ராஜாஜியின் முதல்வர் பதவிக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. இதனால் அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது. இருந்தபோதும் அவரின் இடத்திற்கு வருவதற்கு வேறுறொரு நம்பிக்கையான ஒருவரை நிறுத்த நினைத்தார் ராஜாஜி. அப்போது அவரின் நம்பிக்கைகயான மனிதராக இருந்தவர் தான் சி.சுப்பரமணியம். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பெரும்பான்மையானவர்கள் காமராஜருக்கு ஆதரவாக இருந்ததால் அவர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காமராஜரின் மதிய உணவு திட்டம் Kamarajar Speech in Tamil 10 Lines

kamarajar history in tamil

காமராஜரின் மதிய உணவு திட்டம் அனைவரும் பாராட்டக்கூடிய ஒரு திட்டமாக இருந்தது. காமராஜர் பள்ளிகளில் பிள்ளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்தார். அதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இந்த மதிய உணவு திட்டம். காமராஜரின் மதிய உணவு திட்டத்தால் பல ஏழை பிள்ளைகள் பள்ளி சென்று படித்தனர். காமராஜர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த மதிய உணவு திட்டமானது தமிழகத்தில் இன்றளவும் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. இவரின் இந்த திட்டத்தால் அன்று பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை 32 விழுக்காடாக உயர்ந்தது.

அப்போது ராஜாஜி ஆட்சியில் இருந்த குலக்கல்வித் திட்டத்தை முதலில் கைவிட்டார். தமிழத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மூடி இருந்த 6000 பள்ளிகளை திறந்தார். மேலும் அவர் 17000 பள்ளிகளை திறந்தார். இதில் பல பள்ளிகளை நேரடியாக சென்று அவரே திறந்து வைத்தார்.

காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகள்

காமராஜர் ஆட்சி காலத்தில் முக்கிய 10 நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிலும் அவர் கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக கட்டப்பட்ட தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டி பாலமாகும்.

  • பவானித்திட்டம்
  • மேட்டூர் கால்வாய்த்திட்டம்
  • காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு
  • அமராவதி
  • வைகை
  • பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்
  • சாத்தனூர்
  • கிருசுணகிரி
  • ஆரணியாறு ஆகியவையாகும்.

காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள்

  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
  • மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
  • இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை
  • நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
  • கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
  • மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
  • குந்தா மின் திட்டம்
  • நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்கள்

காமராஜரின் சிறப்பு பெயர்கள்Kamarajar Tamil Speech

  • கர்மவீரர் – karmaveerar kamarajar
  • கருப்பு காந்தி – karuppu gandhi kamarajar
  • கல்வி கண் திறந்தவர் -kalvi kan thirantha kamarajar
  • படிக்காத மேதை – padikkatha methai kamarajar
  • பெருந்தலைவர்- perunthalaivar kamarajar
  • ஏழை பங்காளன் – ezhai pangalan kamarajar
  • கிங் மேக்கர் – king maker kamarajar

பொன்மொழிகள் – Kamarajar Kavithai in Tamil

  • பணம் இருந்தால் தான் மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதையே எனக்கு தேவையில்லை
  • எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை
  • நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகன் தான்
  • எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைபற்றலாம்
  • ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்
  • நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமானவன்
  • சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது
  • எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்

சுவாரஸ்ய தகவல்கள் – 10 Points About Kamarajar in Tamil

  • காமராஜர் எப்போதும் முக்கால் கை வைத்த கதர்ச் சட்டையும் நான்கு முழ வேஷ்டியும் மட்டும் தான் அணிவார்.
  • காமராஜர் ஒருவரை பார்த்து ஒருமுறை பேசிவிட்டால் அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் சரியாக நியாபகம் வைத்து பேசுவார்.
  • அவருக்கு கதர் துண்டு கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார். ஏனெனில் அவர் அந்த துண்டுகளை ஆதரவற்றோருக்கு கொடுத்துவிடுவார்.
  • காமராஜரை என்று எல்லோரும் அழைத்து வந்த நிலையில் பெரியார் மட்டும் தான் காமராசர் என்று தூய தமிழில் அழைத்தார்.
  • ஒருமுறை அவரிடம் ரூ.5லட்சம் இருந்தால் தங்களின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கலாம் என்று தெரிவித்தனர். அதற்கு காமராசர் “அடேங்கப்பா” என்னிடம் அந்த பணம் இருந்தால் 4 பள்ளிகளை கட்டி ஏழை பிள்ளைகளை படிக்க வைப்பேனே என்றார்.
  • அவர் ஆட்சியில் இருந்து இறக்கும் வரைக்கும் அவர் வாடகை வீட்டில் தான் இருந்தாராம்.
  • காமராஜருக்கு கோபம் வந்துவிட்டால் அவர் திட்டி தீட்டிவிடுவாராம். ஆனால் அடுத்த நிமிடமே அதனை மறந்துவிட்டு எப்போதும் போல பழகும் குணம் கொண்டவர்.
  • அவரிடம் பேசும் போது அவர் எப்பொழுதும் அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி என்று தான் பேசுவாராம்.
  • தனது வாழ்நாளில் திருமணம் கூட செய்து கொள்ளாமல் மக்களுக்காகவே வாழ்ந்தவர்.
  • நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்தியில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போய் சேர்ந்தார்.

நினைவுச் சின்னங்கள்2 Minute Speech About Kamarajar in Tamil

தமிழக அரசு, சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க Republic Day History in Tamil..! குடியரசு தின வரலாறு..!

இறப்புKamarajar Death Date

காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அன்று தனது 72 வது வயதில் இறந்துவிட்டார்.

1. கல்வி வளர்ச்சி நாளாக யாருடைய பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது?

k. காமராஜின் பிறந்த நாளை (ஜூலை 15) ‘கல்வி வளர்ச்சி நாள்’ என்று தமிழ்நாடு கொண்டாடுகிறது.

2. எந்த ஆண்டிலிருந்து கல்வி வளர்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?

2006 முதல், இந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

3. காமராஜரை தோற்கடித்தது யார்?

1967 ஆம் ஆண்டு காங்கிரஸுக்கு எதிரான மிகப்பெரிய ஆட்சி எதிர்ப்பு அலை சென்னையில் இருந்தது. காமராஜையும் அவரது கட்சியையும் தோற்கடிக்க வழிவகுத்தது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular