Homeசெய்திகள்ராமருக்கு 1,11,111 லட்டுகள் பிரசாதம்.. அயோத்தியில் ராம நவமி கோலாகலம்..!

ராமருக்கு 1,11,111 லட்டுகள் பிரசாதம்.. அயோத்தியில் ராம நவமி கோலாகலம்..!

ராம நவமி: உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் மொத்தம் 1800 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, மொத்த நிலப்பரப்பு சுமார் 2.7 ஏக்கர் ஆகும். இதில் 57,400 சதுர அடியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை ராமர் சிலை ஆனது 8 அடி உயரம், 3 அடி நீளம் மற்றும் 4 அடி அகலம் கொண்டதாகும். மேலும் இந்த ராமர் கோவில் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட்டது

அயோத்தியில் இன்று கோலாகலமாக ராம நவமி கொண்டாடப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்படும் முதல் ராம நவமி இதுவாகும். அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பால ராமர் கோயிலில் (Ayodhya ramar temple festival 2024) இன்று ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இன்று உலகம் முழுவதும் ராமர், விஷ்ணு, ஆஞ்சிநேயர் காேயில்களில் இன்று பக்தர்கள் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டு வருவார்கள். அதன்படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரம் விழா கோலம் பூண்டுள்ளது என்றே கூறலாம்.

இதனால் அயாேத்தியில் உள்ள ராமர் (Ayodhi Ramar kovil Rama Navami 2024) கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டு, கோயில் திறப்பு விழாவின் போது பீகாரைச் சேர்ந்த தேவராகன்ஸ் பாபா நிர்வாகம் சார்பில் அயோத்திற்கு 40,000 கிலோ லட்டுகளை பிரசாதமாக அனுப்பி வைத்தது.

இதனை தொடர்ந்து முதன் முதலாக அயோத்தியில் கொண்டாடப்படும் முதல் ராம நவமி (Rama Navami 2024) என்பதால் இம்முறை அந்நிர்வாகம் 1,11,111 லட்டுகளை பிரசாதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Ayodhi Ramar kovil Rama Navami 2024

ஒருபுறம் தேர்தல் நேரம் என்பதால் அயோத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கோயில் நிர்வாகமும், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ராமர் கோயில் திறப்பு விழா..! பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular