Homeலைஃப்ஸ்டைல்Deepavali 2023: இயற்கையான பசுமை பட்டாசுகளுடன் கொண்டாடுவோம்...!

Deepavali 2023: இயற்கையான பசுமை பட்டாசுகளுடன் கொண்டாடுவோம்…!

Deepavali அன்று பட்டாசுகள் வெடிப்பது நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், பல வகையான பக்க விளைவுகளை பட்டாசுகள் ஏற்படுத்துகிறது. நாம் பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து துத்தநாகம், சல்பர், சோடியம் மற்றும் தாமிரம் போன்ற இராசயனங்கள் காற்றில் கலந்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் பல வகையான ஆரோக்கிய குறைபாடுகளும் உருவாகிறது. இந்த நிலையில் பசுமை பட்டாசுகள் (Green Crackers)சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது, இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

Deepavali Crackers

இந்த பசுமை பட்டாசுகளை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியது.

பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை மற்றும் வர்த்தகம் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை இந்த பட்டாசுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்த பசுமை பட்டாசுகள் சுற்றுப்புற சூழல் மாசுஅடையாது என்பது இல்லை, ஆனால் இவை வழக்கமான பட்டாசுகளை ஒப்பிடும் போது 30% குறைவான காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இவை தூசியை உறிஞ்சுக்கொள்கின்றன. மேலும் இந்த பசுமை பட்டாசுகளில் பேரியம் , நைட்ரேட் போன்ற அபாயகரமான வாயுக்கள் இல்லை.

இந்த பசுமை பட்டாசுகள் மூன்று வகைகளில் தயாரிக்கப்படுகிது.

  • SWAS
  • SAFAL
  • STAR

SWAS வகை பட்டாசுகள்

இந்த வகை பட்டாசுகள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட பட்டாசுகள் ஆகும். இவை SWAS என அழைக்கப்படுகிறது. இந்த பட்டாசுகள் நீராவி வடிவில் வெளியாகும். இந்த வகையான பட்டாசுகளை வெடிக்கும் போது அதிலிருந்து நீர் விடுப்பட்டு காற்றில் நீராவியை கலக்கிறது, இதன் மூலம் தூசிகளை இப்பட்டாசுகள் அடக்குகிறது. இதிலிருந்து வெளிவரும் துகள் தூசி 30% வரை குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.

SAFAL வகை பட்டாசுகள்

இந்த வகை பட்டாசுகளில் குறைந்தபட்ச அலுமினியம் உள்ளது மற்றும் இவை பாதுகாப்பானவை. இவற்றில் அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் பயன்படுத்தப்படுகிறது. எனவே வழக்கமான பட்டாசுகளை போல் இல்லாமல் இது வெடிச்சத்தின் ஒலியை குறைத்து காட்டும்.

STAR வகை பட்டாசுகள்

இவை தெர்மைட் பட்டாசுகள் ஆகும், இந்த வகையான பட்டாசுகளிலும் பொட்டாசியம், நைட்ரேட் மற்றும் கந்தகம் போன்ற வாயுக்கள் இல்லை. எனவே இது துகள்களை அகற்ற செய்து ஒலி தீவிரத்தையும் குறைக்கும்.

இந்த பசுமை பட்டாசுகளை உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க முடியும். இதனை அடையாளம் காண முடியாவில்லை எனில் CSIR NEERI லோகோ இப்பட்டாசுகளில் இருக்கும், அதன் மூலம் கண்டறியலாம்.

Green Cracker Logo

பசுமை பட்டாசுகளை தீபாவளிக்கு ஏன் பயன்படுத்த வேண்டும் (Why use green crackers for Deepavali)

  • பசுமை பட்டாசு வெடிப்பதால் வெடி விபத்துகள் போன்ற அசம்பாவிதங்கள் குறைந்து காணப்படும்.
  • நாம் வழக்கமாக பயன்படுத்தும் பட்டாசுகளில் பல நச்சு உலோகங்கள் வெளியிடுகிறது. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் பட்டாசுகளில் வெளிப்படும் நைட்ரேட் மனநல குறைபாட்டை மேம்படுத்தும், கண்கள், சளி சவ்வு, தோலிலும் எரிச்சலை உண்டு செய்யும். ஆனால் பசுமை பட்டாசுகளில் உடலுக்கு கேடு விளைவிக்கும் வாயுக்கள் இல்லை. இதனால் உடல் ஆரோக்கிய குறைபாடுகளில் இத்தகைய பாதிப்புகள் இல்லை.
  • வழக்கமாக பயன்படுத்தும் பட்டாசுகளில் இருந்து வெளிப்படும் நச்சு புகை மற்றும் நிறங்கள் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். சுவாசக்கோளாறு தொற்று இருப்பவர்களுக்கு அதிகம் பாதிப்பை உண்டாக்கும். ஆனால் பசுமை பட்டாசுகளில் இந்த பாதிப்புகள் அதிகளவில் இல்லை.
  • பசுமை பட்டாசுகளில் பெரும்பாலான இராசயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. எனவே சுற்றுப்புற சூழல் மாசு தடுக்கப்படுவதால் பெரும்பாலும் இது பாதுகாப்பானதாக சொல்லப்படுகிறது.
  • பசுமை பட்டாசு வெடிக்கும் போது வரும் ஒலி அளவை குறைக்கிறது, துகள்கள் மற்றும் வாயுக்கள் வெளியேறுவதை குறைக்கிறது.
  • நாம் வழக்கமான பயன்படுத்தும் பட்டாசுகளில் உள்ள ஆர்செனிக், லித்தியம், பேரியம் அல்லது ஈயம் போன்ற உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் வேதித்துகள்கள் இதில் இல்லை என்பதால், பசுமை பட்டாசுகளில் நச்சுத்தன்மை குறைவு.
  • Green Crackers வெடிக்கும் போது நீராவியை வெளியிடுகிறது. இது காற்றில் உள்ள தூசி துகள்களை அடக்க செய்கிறது.
Crackers

பட்டாசுகள் வெடிக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை

  • பட்டாசுகளை வெடிக்கும் போது காலணிகளை அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
  • மரங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றகூடிய இடங்களில் பட்டாசுகளை வைக்க வேண்டாம்.
  • திறந்த வெளி, அல்லது மைதானங்கள் போன்ற இடங்களில் வெடிப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.
  • ​பட்டாசுகளை வெடிக்கும் போது அருகிலேயே ஒரு பக்கெட் நிறைய குளிர்ந்த நீரை வைத்திருக்க வேண்டும்.
  • குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது.
  • பட்டாசுகளை பற்றவைக்க நீண்ட மெழுகுவர்த்தி அல்லது நீண்ட கம்பி மத்தாப்புகளை பயன்படுத்த வேண்டும்.
  • பட்டாசுகள் வெடிக்கும் போது முகத்தை அருகே கொண்டு செல்ல கூடாது.
  • பட்டாசுகளினால் காயம் ஏற்பட்டால் முதலில் குளிர்ந்த நீரில் நனையுங்கள். தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
Crackers
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular