Homeதொழில்நுட்பம்உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சிறந்த 5 எல்ஐசி பாலிசிகள்..! 5 Best Life Insurance Policy...

உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சிறந்த 5 எல்ஐசி பாலிசிகள்..! 5 Best Life Insurance Policy in India..!

நம் வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது. நாம் சம்பாதிக்கும் பணம் நம் வாழ்க்கைக்கு கடைசி வரைக்கும் எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்பதை நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சிலர் வங்கிகளில் மற்றும் குழு போன்றவற்றில் பணத்தை சேமித்து வருவார்கள். காரணம் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு பிறகு அந்த சேமிப்பு பணமானது மொத்தமாக நமக்கு கிடைக்கும். ஒவ்வொருவரும் பல வழிகளில் சேமித்து வருகின்றனர்.

நாம் இந்த பதிவில் LIC பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இது ஆயுள் காப்பீட்டு கழகம் (Life Insurance Corporation) என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்ஐசி இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு காப்பீட்டு கழகமாகும். இது ஒரு முதலீட்டு கழகமாகும். LIC Policy Details in Tamil பற்றிய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

LIC என்றால் என்ன? What is LIC?

Life Insurance Corporation

Life Insurance Corporation (LIC) இந்த ஆயுள் காப்பீடு இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு முதலீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் செப்டம்பர் 1, 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் எந்தவித ஆபத்தும் இல்லை. உத்தரவாதத்துடன் பல பலன்களை அளிக்கும் சிறந்த நிறுவனமாக எல்ஐசி உள்ளது.

சேதம், இறப்பு இழப்புக்கு உத்தரவாதம் வழங்கும் நிறுவனமாக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உள்ளது. இதனால் எல்ஐசி நிறுவனத்தில் அதிக மக்கள் பாலிசிகளை எடுக்கின்றனர். இந்த காப்பீட்டு திட்டம் அனைத்து மக்களுக்கு ஏதுவாக உள்ளது. ஒவ்வொருவரின் தகுதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட காப்பீட்டு திட்டமாகும். நாம் இந்த பதிவில் எல்ஐசி-ல் முக்கிய 5 பாலிசி திட்டங்கள் பற்றி காண்போம்.

ஜீவன் அமர் பாலிசி திட்டம் – Jeevan Amar policy Details in Tamil

  • இந்த ஜீவன் அமர் பாலிசி திட்டம் என்பது ஒரு Term Policy திட்டமாகும்.
  • இந்த பாலிசியில் காலம் முழுவதும் ஒரே வகையான காப்பீட்டு தொகையை தேர்வு செய்யலாம்.
  • 18 வயது நிரம்பியவர்கள் இந்த பாலிசியில் இணைந்து கொள்ளலாம்.
  • இந்த பாலிசியில் பாலிசிதாரா் இறந்துவிட்டால் நாமினி பணத்தை மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த பாலிசியில் 18-65 வயது வரையிலானவர்கள் சேர்ந்துக்கொள்ளலாம். இந்த பாலிசியை 20 வயதான ஒருவர் எடுத்தால் அவர் 60 ஆண்டுகள் காப்பீடு பெறலாம். அதிகப்பட்சமாக 80 வயது வரையில் காப்பீடு பெறலாம்.
  • இந்த பாலிசியில் பெண்களுக்கு பிரீமியம் குறைவு. குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக ரூ. 25 லட்சம் ஆகும். அதிகபட்ச காப்பீட்டு தொகைக்கு வரம்பு இல்லை.
  • இந்த பாலிசியில் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இதில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பிரீமியம் செலுத்திக் கொள்ளலாம்.

ஜீவன் லாப் பாலிசி திட்டம் – Jeevan Labh Plan Details in Tamil

  • இந்த Policy ஒரு பாதுகாப்பான சேமிப்பு பாலிசி ஆகும்.
  • இந்த பாலிசி குறைந்தபட்ச வயது 8 நிரம்பியவர்கள் எடுத்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக வயது 60 ஆகும்.
  • இந்த திட்டத்தில் மொத்தம் 3 பிளான்கள் உள்ளன. முதலாவது 16 வருட பாலிசியாகும் இதில் 10 வருடம் பணம் கட்டினால் போதும். இரண்டாவது 21 வருட பாலிசி காலமாகும். இந்த பாலிசியில் 15 வருடம் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். மூன்றாவது 25 வருட பாலிசி இதில் 16 வருடம் மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும்.
  • பாலிசிதாரர் பாலிசி காலத்தின் போது இறந்துவிட்டால் நாமினிக்கு காப்பீடு தொகை வழங்கப்படும்.
  • காப்பீடு தொகை குறைந்தபட்சம் 2 லட்சமாகும். அதிகபட்ச தொகைக்கு வரம்பு கிடையாது.
  • இந்த பாலிசிக்கு 80சி கீழ் அடிப்படையில் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • 3 ஆண்டுகளுக்கு பிறகு கடன் பெற்றுக்கொள்ளலாம்.
  • இந்த பாலிசி குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்தை திட்டமிடுவதற்கு சிறந்த பாலிசியாகும்.

ஜீவன் உமாங் பாலிசி திட்டம் – Jeevan Umang Policy Details in Tamil

  • எல்ஐசி பாலிசி திட்டங்களிலே மிகவும் முக்கியமான திட்டம் தான் இந்த ஜீவன் உமாங் பாலிசி திட்டம்.
  • இது ஒரு முழு ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.
  • பாலிசி முடிந்த பிறகு மொத்த தொகை கையில் கிடைக்கும்.
  • இந்த பாலிசி எடுப்பதற்கு குறைந்தபட்ச வயது 90 நாட்களாகும். பிறந்த குழந்தைக்கு இந்த பாலிசியை எடுத்துக்கொள்ளலாம்.
  • அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகளாகும்.
  • குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ. 2லட்சமாகும்.
  • இந்த திட்டத்தின் கீழ் பெரிய தொகை உத்தரவாதம் கிடைக்கும்.
  • வருமான வரிச் சட்டம் 80சி இன் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • இந்த பாலிசி 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கு பீரிமியம் நிலை உள்ளது.
  • இந்த பாலிசி 100 வயது வரை பலன் கிடைக்கிறது. உங்கள் பிரீமிய காலத்திற்கு பிறகு மொத்த திட்டத்தில் இருந்து 8 சதவீதம் பலன் கிடைக்கும்.
  • ஒரு நபருக்கு 26 வயது ஆகிறது எனில் காப்பீட்டு தொகை 4.5 லட்சம் என்றால், 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். அதன் பிறகு ஆண்டுதோறும் 36,000 ரூபாய் கிடைக்கும்.

நியூ ஜீவன் ஆனந்த் திட்டம்New Jeevan Anand Policy Details in Tamil

  • இந்த திட்டத்தை 18 வயது நிறைவடைந்தவர்கள் வாங்க முடியும்.
  • அதிகபட்ச வயது வரம்பு 50 வரை இந்த திட்டத்தை வாங்க முடியும்
  • குறைந்தபட்ச காப்பீட்டு தொகை ரூ.1,000 என்றும், அதிகபட்ச தொகைக்கு வரம்பு நிர்ணயம் செய்யவில்லை.
  • இந்த பாலிசி 15 ஆண்டுகள் மற்றும் 35 ஆண்டுகள் என பாலிசி காலமாக எடுத்துக் கொள்ளலாம்.
  • அதிகபட்ச முதிர்வு வயது 75 ஆகும்.
  • இந்த பாலிசியில் பிரீமியம் தொகையை அரையாண்டாகவோ, காலாண்டாகவோ, மாதந்திரமாகவோ கட்டலாம்.
  • இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக கட்டவில்லை என்றால் பாலிசி காலாவதி ஆகிவிடும்.

டெக் டேர்ம் பிளான் பாலிசி திட்டம் – Tech Term Plan Details in Tamil

  • இந்த பாலிசி திட்டம் ஆன்லைன் டெர்ம் பாலிசி ஆகும்.
  • இது ஆஃப்லைன் பாலிசிகளை விட மலிவானதாக உள்ளது.
  • பாலிசிதாரர் பாலிசி முடிவடைவதற்குள் இறந்துவிட்டால் பாலிசியின் மொத்த தொகையும் குடும்பத்திற்கு கிடைக்கிறது.
  • இந்த பாலிசி திட்டம் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையாகும்.
  • 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் இந்த திட்டத்தை எடுத்துக்கொள்ளலாம்.
  • பாலிசியின் அதிகபட்ச வயது வரம்பு 80 ஆக உள்ளது.
  • இந்த டெக் டர்ம் பாலிசியில் பிரீமியத்தை ஆண்டுக்கு ஒருமுறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறையாக செலுத்திக் கொள்ளலாம்.
  • இந்த டெக் டர்ம் பாலிசியில் பீரிமியத்தை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ-வாலட், UPI, IMPS மூலம் பணம் செலுத்திக் கொள்ளலாம்.

மேலும் எல்ஐசி குறித்த விவரங்களை தெரிந்துக் கொள்ள licindia.in இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

மேலும் படிக்க: கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?

எல்ஐசி – FAQS

1. எல்ஐசி 100% பாதுகாப்பானதா?

எல்ஐசி அரசு நிறுவனம் என்பதால், எல்ஐசி-யின் கீழ் உள்ள அனைத்து முதலீடுகளும் பாதுகாப்பானவை.

2. எல்ஐசியின் நன்மைகள் என்ன?.

எல்ஐசி மூலம் சேமிக்கப்படும் சேமிப்பு, சேமிப்பாளரின் மரண அபாயத்திலிருந்து முழுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு வேளை பாலிசிதாரா் இறந்துவிட்டால் ஆயுள் காப்பீடு செய்யப்பட்ட முழு தொகையும் குடும்பத்திற்கு வழங்கப்படும்.

3. எல்ஐசியின் உரிமையாளர் யார்?

இந்திய அரசு

4. எல்ஐசி எந்தப் பிரிவின் கீழ் உள்ளது?

வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

5. எத்தனை நாடுகளில் எல்ஐசி உள்ளது?

பிஜி, மொரிஷியஸ், இங்கிலாந்து, பஹ்ரைன், நேபாளம், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 14 நாடுகளில் உள்ளது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular