Homeசெய்திகள்பொன்னியின் செல்வன் 1038-வது சதய விழா..! தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

பொன்னியின் செல்வன் 1038-வது சதய விழா..! தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

Rajaraja Chozhan 1038-வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகின்ற 25-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்.

தமிழர்களின் கட்டிக்கலைக்கும் சிற்ப கலைக்கும் உதரணமாகவும், உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் ( UNESCO) அறிவிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜ சோழன் என்னும் அருண்மொழி வர்மனின் 1038-வது சதய விழா அக்டோபர் 24-ஆம் தேதி தொடங்கி, 25-ஆம் தேதி என இரண்டு தினங்கள் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி சதய விழா அரசு விழாவாக இரண்டு தினங்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி பூஜைகள் செய்து நடப்பட்டது.

தஞ்சை மாநகரம் Sathaya Vizha கொண்டாடவுள்ள நிலையில் பெருவுடையார் கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டுள்ளது. Periya Kovil மட்டுமல்லாமல் தஞ்சையில் உள்ள முக்கிய இடங்களான அரசு மருத்துவமனை சாலை, தந்தை பெரியார் சாலை, அறிஞர் அண்ணா சாலை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்ததாலும், அதே சதய நட்சத்திரத்தில் கி.பி. 985-ஆம் ஆண்டு அவருக்கு முடி சூட்டப்பட்டது. அதனை நினைவு கூறும் விதமாக ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

சதய நட்சத்திரம் 24-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெறுவதால் இவ்விழா இரண்டு தினங்களுக்கு கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பரதநாட்டியம், கருத்தரங்கம், கவியரங்கம், திருமுறை அரங்கம், திருமுறை இசை, சிவதாண்டவம், மேடை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற உள்ளது.

மேலும் அரசு சார்பில் மாமன்னன் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபடவுள்ளது. இதனை தொடர்ந்து பெருந்தீப வழிபாடு, பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேகம், சுவாமி திருவிழா வீதி உலா, நாத சங்கமம், இன்னிசை நிகழ்ச்சி மற்றும் இராஜராஜன் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விடுமுறையாலும் 25-ஆம் தேதி தஞ்சை உள்ளூர் விடுமுறையாலும் பொதுமக்கள் பெருவுடையார் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் குழந்தைகளுடன் கோயிலின் முன் புகைப்படங்கள் எடுத்தும், செல்ஃபி எடுத்தும் செல்கின்றனர்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular