Homeலைஃப்ஸ்டைல்மாட்டு பொங்கல் கோலம் 2024..! Mattu Pongal Kolam Designs..!

மாட்டு பொங்கல் கோலம் 2024..! Mattu Pongal Kolam Designs..!

ஒவ்வொரு ஆண்டும் தமிழர்கள் கொண்டாடும் முதல் பண்டிகை பொங்கல் தான். இந்த பொங்கல் பண்டிகை ஆனது நான்கு நாட்கள் நடைபெறும். போகி, பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகும். இந்த பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோலங்கள் தான்.

பெண்கள் அனைவரும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக வாசல் தெளித்து கோலம் போடுவார்கள். ஏனென்றால் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்களினால் வீடு லட்சுமி கடாட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டிற்கு வருபவர்களுக்கு இந்த அழகிய கோலங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் போது வீட்டு வாசலில் பெரிய கோலங்கள் போடுவார்கள்.

தமிழ் மாதமான மார்கழி மாத தொடக்கத்திலேயே அனைவரின் வீட்டு வாசலிலும் அழகான மற்றும் பெரிய கோலங்கள் போடுவார்கள். அதிலும் அழகான பல வண்ணங்கள் கொண்ட கோலங்கள் போடுவார்கள். பொங்கல் பண்டிகைக்கு அழகான பானை கோலம், மாட்டு பொங்கல் அன்று அழகிய மாடு உருவம் கொண்ட கோலம் போடுவார்கள். இது போன்று அழகிய Mattu Pongal Kolam HD Imges in Tamil இந்த பதிவில் பதிவிட்டுள்ளாம்.

மாட்டு பொங்கல் ரங்கோலி (Mattu Pongal Rangoli 2024)

Rangoli Kolam For Mattu Pongal
Mattu Pongal Kolam

நம்மில் பலரும் பல வகையான கோலங்களை நம் வீட்டில் வாசலில் தினமும் பொடுவோம். இருப்பினும் மார்கழி மாதம் போடப்படும் கோலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஏனென்றால் மார்கழி மாதத்தில் தான் அனைவரும் அழகிய வண்ணம் கொண்ட பெரிய பொங்கல் கோலங்கள் போடுவார்கள். அதிலும் சிலர் மாட்டு பொங்கல் அன்று மாடு உருவம் (Mattu Pongal Kolam Photos) கொண்ட கோலங்கள் வீட்டு வாசலில் போடுவார்கள்.

மாட்டு பொங்கல் ரங்கோலி படங்கள் (Mattu Pongal Rangoli Images)

Mattu Pongal Kolam
Mattu Pongal Rangoli

மாட்டு பொங்கல் பண்டிகையின் போது அனைவரும் அவர்கள் வீட்டு வாசலில் அழகான கோலங்கள் போடுவார்கள். சிலர் மாடு உருவம் கொண்ட கோலங்கள் போடுவார்கள். அவர்கள் மேலே பதிவிட்டுள்ள அழகிய மாட்டு பொங்கல் ரங்கோலி கோலம் பார்த்து வீட்டு வாசலில் வரைந்து கொள்ளலாம்.

மாட்டு பொங்கல் கோலம் (Mattu Pongal Kolam Beautiful Images)

பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் வீட்டு வாசலில் அழகிய பல வண்ண கோலங்கள் போடுவார்கள். அதேபோல் சிலர் வீட்டின் பூஜை அறைகளிலும் கோலம் போடுவார்கள். அவர்களுக்கு இது போன்ற மாட்டு பொங்கல் கோலங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மாட்டு பொங்கல் ரங்கோலி கோலம் (Mattu Pongal Rangoli Kolam)

Pongal Rangoli 2024

ஈசி மாட்டு பொங்கல் கோலம் (Easy Mattu Pongal Kolam)

Mattu Pongal Kolam 2024

பொங்கல் பண்டிகையில் இரண்டாவது நாள் மாட்டு பொங்கல் பொண்டாடப்படுகிறது. இந்நாளில் வருடம் தோறும் உழவு செய்ய உதவும் மாடுகளுக்கு சிறப்பு செய்யும் நாளாக உள்ளது. மேலும் இன்றைய தினத்தில் பலரும் தங்கள் வீட்டின் வாசலில் மாட்டின் உருவத்தினை வரைந்து வண்ணம் தீட்டுவர். வீட்டு வாசலில் போட உதவும் வகையில் ஈசியான மாட்டு பொங்கல் கோலம் (Mattu Pongal Kolam Easy) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சிம்பிள் மாட்டு பொங்கல் கோலம் (Simple Mattu Pongal Kolam)

பெரும்பாலும் மாடு உருவம் கொண்ட கோலங்கள் மாட்டு பொங்கல் அன்று மற்றும் கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டுமே போடப்படும். அதிலும் பசு மாடு மற்றும் கன்று குட்டி உருவம் கொண்ட கோலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.

புதுமனை புகுவிழாவின் போது கூட பசு மாடு மற்றும் கன்று குட்டியை வீட்டிற்குள் அழைத்து வருவார்கள். பசு மாடு லட்சுமி தேவியின் மறு உருவமாக கருதப்படுவது. இது போன்ற பசு மற்றும் கன்று குட்டி கோலம் போடுவது வீட்டில் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரும் என கூறப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டுள்ள Mattu Pongal Simple Kolam ஆகும்

மேலும் படிக்க: பொங்கல் வாழ்த்துக்கள்: தமிழர் திருநாள் Pongal Wishes 2024 in Tamil..!

புள்ளி மாட்டு பொங்கல் கோலம் (Mattu Pongal Kolam with Dots)

மாட்டுப் பொங்கலுக்கு போடப்படும் மாடு உருவம் கொண்ட கோலங்கள் ரங்கோலி போலவும், புள்ளி வைத்தும் போடுவார்கள். புள்ளிகள் வைத்து போடப்படும் கோலம் புள்ளி கோலம் எனப்படும். இது போன்று புள்ளிகள் வைத்து போடப்படும் மாட்டு பொங்கல் கோலம் (Mattu Pongal Pulli Kolam) ஆனது வீட்டு வாசலில் மிக அழகாக இருக்கும்.

இது போன்ற அழகான மாட்டு பொங்கல் ரங்கோலி மற்றும் கோலங்களை இந்த பதிவின் பதிவிட்டுள்ளாம். இதனை பயன்படுத்தி இந்த வருடம் மாட்டு பொங்கல் அன்று வீட்டு வாசலில் அழகிய வண்ண வண்ண மாட்டு பொங்கல் கோலம் போட்டு மகிழவும்.

மேலும் படிக்க: பொங்கல் வரலாறு..! Pongal History in Tamil..!

Mattu Pongal Kolam – FAQ

1. 2024 ஆம் ஆண்டு மாட்டு பொங்கல் எப்போது கொண்டாடப்பட உள்ளது?

2024 ஆம் ஆண்டு மாட்டு பொங்கல் வரும் ஜனவரி 16 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

2. மாட்டுப் பொங்கலுக்கு உள்ள வேறு பெயர்கள் என்ன?

மாட்டு பொங்கல் பண்டிகை என்பது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

3. கோலத்தின் வகைகள் எத்தனை?

கோலம் பல வகைப்படடும். அவை, கம்பி கோலம்,புள்ளி கோலம், மாக்கோலம், பூக்கோலம் மற்றும் ரங்கோலி கோலம் போன்ற பல வகைகள் கோலங்களில் உண்டு.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular