Homeலைஃப்ஸ்டைல்Mattu Pongal Wishes in Tamil..! இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

Mattu Pongal Wishes in Tamil..! இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைகளில் இரண்டாவது நாளாக மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான தை மாதத்தில் இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த மாட்டு பொங்கல் பண்டிகை என்பது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தான் திருவள்ளுவர் தினம் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் மாட்டு பொங்கல் பண்டிகையானது ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொண்டாடுகிறாேம்.

உழவுக்கு உழவருக்கு உறுதுணையாக இருக்கும் எருதுகளை போற்றும் வகையிலும் அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகையின் போது மாடுகளை குளிப்பாட்டி வண்ண வண்ண நிறங்கள் மற்றும் பூக்களால் அலங்கரித்து உழவுக்கு உதவும் மாடுகளை தெய்வமாக கருதி பொங்கல் சமைத்து படையல் இடுவார்கள்.

அதுமட்டுமின்றி மாட்டு பொங்கல் அன்று வீரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏறு தழுவல், மஞ்சு விரட்டு எனவும் அழைப்பார்கள். இந்த ஏறு தழுவுதல் போட்டியானது தமிழர்களின் மரபுவழி வீர விளையாட்டுகளில் ஒன்றாகும்.

இது போன்று பல போட்டிகள் இந்த பொங்கல் பண்டிகைகளின் போது நடைபெறும். இந்த வருடம் மாட்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு மற்றும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உங்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்வதற்கு சிறப்பான மாட்டு பொங்கல் வாழ்த்துக்களை இங்கு பதிவிட்டுள்ளோம். அனைவருக்கும் நமது வலைதளத்தின் சார்பாகஇனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் (Mattu Pongal Wishes in Tamil).

Mattu Pongal Wishes in Tamil

Mattu Pongal Wishes in Tamil

கலைப்பறியாது உழைக்கும் உனக்கு
காலை வணங்கி கூறுகிறேன்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Mattu Pongal Wishes Image in Tamil

அன்பின் ஒவ்வொரு நிறமும்
உங்கள் வீட்டையும் இதயத்தையும் நிறைய
மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும்.
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Happy Mattu Pongal Wishes in 2024

Mattu Pongal Wishes Image

தாய் கூட சில மாதங்கள் தான்
எனக்கு பால் ஊட்டினாள்
ஆனால் நான் இருக்கும் வரை
எனக்கு பால் கொடுக்கும் நீ
என் தாயினும் சிறந்தவள்.
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2024

Mattu Pongal Wishes

இந்த அழகான பண்டிகை
உங்கள் வாழ்க்கையில் வெற்றியையும்,
மகிழ்ச்சியையும், புன்னகையையும் தரட்டும்
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Mattu Pongal Wishes in Tamil

Mattu Pongal in Tamil

நம் விவசாயிகளும், விளை செல்வங்களும்
செழிப்புடன் என்றும் நிறைந்திருக்க அனைவருக்கும்
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Mattu Pongal Wishes in 2024

விவசாயத்தின் தோழனாய்,
உழவனின் தொண்டனாய்,
வீரத்தின் அடையாளமாய்
விளங்கும் மாடுகளுக்கு
நன்றி செலுத்துவோம்…
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

Happy Mattu Pongal Wishes

Happy Mattu Pongal Wishes

இவ்வுலகில்,
தாய்ப்பால் அருந்தாமல் வளர்ந்தவர் பலர்,
பசும் பால் அருந்தாமல் வளர்ந்தவர் இலர்!
அனைத்து உறவுகளுக்கும்
அன்பார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Mattu Pongal Wishes

மாடுகளின் அழகினை
கவிதையில் வர்ணிக்கலாம்
ஆனால் உழைப்பை வர்ணிக்க
ஓராயிரம் கவிதை போதாது.
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க: மாட்டு பொங்கல் கோலம் 2024..! Mattu Pongal Kolam Designs..!

Mattu Pongal Wishes

Happy Mattu Pongal Wishes

உழைத்து களைத்த
உழவர்களுக்கு ஒருநாள்
உழவர் திருநாள்!
உழைத்து களைத்த
உனக்கும் ஒரு நாள்
மாட்டுப்பொங்கல்!
விவசாயிகள் அனைவருக்கும்
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Mattu Pongal in 2024

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
மார்தட்டி நாம் கொண்டாடுவோம்
இன் நன்னாளினை…!
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

Mattu Pongal Wishes Images

Happy Mattu Pongal Wishes

உழவனுக்கு மட்டும் அல்ல,
ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு
உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான்
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Mattu Pongal Wishes 2024

மண் வாசனையோடு
ஏர் கலப்பைகளை சுமந்து நாம்
இன்பமாய் உணவுண்ண
விவசாயிக்கு தோள்கொடுக்கும்
எருதுகளை போற்றுவோம்.
மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.

இந்த பொங்கல் பண்டிகைக்கு இதுபோன்ற மாட்டு பொங்கல் வாழ்த்துக்களை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உங்கள் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் நமது வலைதளத்தின் சார்பாக இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க: Pongal Kolam 2024: அழகிய பொங்கல் கோலங்கள்..!

Mattu Pongal Wishes – FAQ

1. பொங்கல் எத்தனை நாட்கள் கொண்டாடப்படுகிறது?

பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்கள் நடைபெறும்.

2. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி எங்கு நடைபெறும்?

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளி மிகவும் சிறப்பு வாய்ந்தவை.

3. 2024 ஆம் ஆண்டு முதல் முதலில் ஜல்லிக்கட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது?

இந்த ஆண்டில் புதுக்கோட்டையில் உள்ள தச்சங்குறிச்சியில் தமிழகத்தில் முதல் முதலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

4. ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் எப்போது நடைபெற்றது?

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 முதல் 23 ஆம் தேதி வரை தமிழகத்தில், தமிழர் வாழும் பகுதிகளில் நடைபெற்றது.

5. பொங்கல் பண்டிகை வேறு எந்த மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 13 ஆம் தேதி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இந்த பொங்கல் பண்டிகை லோஹ்ரி என்ற பெயரில் கோதுமை அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular