Homeசெய்திகள்Orange Alert: தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை..!

Orange Alert: தமிழகத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை இந்த வருடம் இயல்பை விட குறைவாகவே பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Vada Kizhakku Paruva Mazhai தொடக்கத்தில் இரண்டு புயல்கள் உருவான போதிலும் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவிற்கு மழை இல்லை. தற்போது இலங்கையை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான கனமழையும், சில இடங்களில் மிதமான கனமழையும் பெய்து வருகிறது.

தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு நாளைய தினம் ‘ஆரஞ் நிற’ அலார்ட் அறிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். நாளை முதல் வரும் 6-ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Vada Kizhakku Paruva Mazhai

மழை அதிகம் பெய்யும் இடங்களில் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த ‘Orange Alert’ எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்காவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூா், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular