Homeசெய்திகள்மிக்ஜாம் புயல் நிவாரண நிதி அமைச்சர்கள், எம் பி க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை...

மிக்ஜாம் புயல் நிவாரண நிதி அமைச்சர்கள், எம் பி க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கினார்கள்..!

சென்னையில் டிசம்பர் 2 முதல் 4 தேதி வரை மிக்ஜாங் புயலால் பெரும் பாதிப்படைந்துள்ளது சென்னை நகரம். 2015-ம் ஆண்டுக்கு பிறகு வந்த பெரும் பாதிப்பு என்றே இதனை கூறலாம். இந்த மழையால் கிட்டதட்ட ஒரு கோடி மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தனியார் நிறுவனங்கள், திரைப்பிரபலங்கள், என அனைவரும் அவர்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருடைய ஒரு மாத ஊதியத்தை புயலால் பாதித்த மக்களுக்களின் நிவாரண நிதிக்காக (Mudhalvar Nivarana Nithi) வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களும் அவர்களது ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

Mudhalvar Nivarana Nithi

தற்போது தமிழக அமைச்சர்கள், (puyal nivarana nithi tn minister one month salary 2023) எம்பிக்கள் தமிழக முதலமைச்சரை சந்தித்து அவர்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் கோவி.செழியன் சந்தித்து ஆகியோர் சந்தித்து நிவாரணத் தொகையை (puyal nivarana nithi 2023) வழங்கினார்கள்.

அமைச்சர்கள் அவர்களின் ஒரு மாத ஊதியமாக 35லட்சத்து 70 ரூபாயும், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமாக 91 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாயும், மொத்தமாக 1 கோடியே 27லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாய்கான காசோலையை வழங்கினார்கள்.

மேலும் படிக்க: புயல் நிவாரண நிதி: ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன்..! முதல்வர் மு.க. ஸ்டாலின்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular