Homeசெய்திகள்மோடியின் சர்ச்சை பேச்சு.. உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மோடி..!

மோடியின் சர்ச்சை பேச்சு.. உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மோடி..!

நாட்டில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி, மதம் சார்ந்த விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேச்சை பேசியுள்ளார் நாட்டின் பிரதமர் மோடி. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்ட இந்து-முஸ்லீம் பிரவினைவாத பேச்சுகளை பேசியுள்ளார். அவர் பேசும் போது நமது நாட்டின் செல்வதை எல்லாம் இஸ்லாமியர்கள் (Modi Calls Muslims Infiltrators) எடுத்து செல்வதாகவும், அவர்கள் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்கிறார்கள் அவர்களுக்கு நமது சொத்துக்கள் கொடுக்கப்படுகிறது என்று இரு சமூக மக்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அவர் பேசியுள்ளார்.

மோடியின் இந்த சர்ச்சையான பேச்சுக்கு (Modi muslim issue) நாடு முழுவதும் கடும் கண்டன் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் மீது தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் இவரின் மீது மட்டும் தேர்தல் ஆணையத்தில் இதுவரை இருபதாயிரம் பேர் புகார் கொடுத்துள்ளனர். மக்கள் மத்தியிலும் இவர் பல கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

மோடியின் இந்த பேச்சு சர்வதேச அளவில் பேசுபொருளாக (Modi attack on muslim) மாறியுள்ளது. நியூயார்க் டைம்ஸ், தி வாஷிடங்க்டன் போஸ்ட், அல்ஜசீரா, CNN, BCC என அனைத்திலும் இவரின் பேச்சு வெளியாகி கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. இதனால் நரேந்திர மோடி உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மானத்தை வாங்குகீறார் என தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும்… சோதனைகள் தொடரும்…
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular