Homeசெய்திகள்மோடி ஆட்சியில் மற்றுமொரு சாதனை..! தமிழகத்திற்கு மீண்டும் கிடைத்த பொக்கிஷம்..!

மோடி ஆட்சியில் மற்றுமொரு சாதனை..! தமிழகத்திற்கு மீண்டும் கிடைத்த பொக்கிஷம்..!

இந்தியா என்றாலே பல மொழிகள் பேசும் மக்கள், பல மதங்கள் கொண்ட நாடாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், கலைகள் போன்றவற்றிற்க்கு சிறப்பாக விளங்கும் நாடாகவும், இங்கு அதிக கற்கோவில்கள், சிற்பங்கள் என தொன்மையான கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் நம் நாட்டில் புராதனச் சிலைகள் உள்ளன.

ஆனால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அதாவது ஆங்கிலேய ஏகாதிபத்திய காலத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவிலான புராதனாச் சின்னங்கள் கடத்தப்பட்டுள்ன. அதனை மீட்கும் பணியில் இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தது. புராதானச் சின்னங்கள் (Ancient symbols) மட்டுமல்லாமல் கோவில்களின் பெரும் பொக்கிஷங்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன.

நம் நாடு விடுதலை அடைந்த பிறகு தொல்லியல் துறை சார்பாக பாதுகாக்கப்படும் 3696 பொருட்களில் 486 பொருட்கள் காணாமல் போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் புராதன சின்னங்களை மீட்பதற்கான முயற்சிகள் எடுத்து வந்தாலும், மோடி ஆட்சியில் அதன் பணி முடுக்கிவிடப்பட்டது.

Archaeological materials

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் நேற்று மக்களவையில் பேசுகையில் 1976 முதல் 2023 வரை 357 தொல்லியல் பொருட்கள் இந்திய தொல்லியல் துறையால் மீட்கப்பட்டுள்ளது (Recovery of Archaeological Materials of India). இதில் 344 பொருட்கள் 2014 க்கு பிறகு மீட்க்கப்பட்டன. அதாவது கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் மீட்கப்பட்ட தொல்லியல் பொருட்களில் 96 சதவீதம் மோடியின் ஆட்சியில் தான் நடந்தது என்று கூறினார்.

இதில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்தில் இருந்து மீட்கப்பட்ட 31 தொல்லியல் பொருட்களும் (Archaeological materials) தமிழ்நாட்டை சேர்ந்தது என அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீர் வழக்கு 370-சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular