Homeசினிமாநடிகர் சங்க கட்டிட பணிக்கு நிதி உதவி வழங்கிய நெப்போலியன்..! எவ்வளவு தெரியுமா?

நடிகர் சங்க கட்டிட பணிக்கு நிதி உதவி வழங்கிய நெப்போலியன்..! எவ்வளவு தெரியுமா?

1952 ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆனது சென்னையில் இயங்கி வருகிறது. தற்போது இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் இருக்கிறார். நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணிக்கு நடிகர் நெப்போலியன் (Nepolean) நிதியுதவி வழங்கியுள்ளார். நெப்போலியன் செய்த நிதி உதவிக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கமானது கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இயகங்கி வருகிறது. இந்த சங்கத்தின் தலைவர்களாக பல நடிகர்கள் இருந்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், சரத்குமார் போன்றவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர்.

தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக விஷாலும் மற்றும் பொருளாளராக நடிகர் கார்த்தியும் பொறுப்பில் இருந்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புது கட்டிடத்தின் கட்டுமான (New Nadigar Sangam Building) பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு மொத்தமாக 40 கோடி நிதி தேவைப்படுவதாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்காக நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் ரூபாய் 1 கோடி நிதி உதவி வழங்கி உள்ளனர். சமீபத்தில் கூட நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கினால்.

இவர்களை போல் மேலும் பல நடிகர்கள் நிதி உதவி வழங்கி உள்ளனர். இந்தநிலையில் தற்போது நடிகர் நெப்போலியனும் ரூபாய் 1 கோடியை தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டுமான பணிக்கு (Napoleon gave Funds to Nadigar Sangam) வழங்கியுள்ளார்.

மேலும் படிக்க: தமிழ் திரையுலகில் 50 கோடி வசூல் செய்த முதல் படம் யாருடைய படம் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular