Homeசினிமாலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அணிந்திருந்த Pink Rolex Watch..! அதன் விலை என்ன தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அணிந்திருந்த Pink Rolex Watch..! அதன் விலை என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நடிகை தான் நாம் அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் நடித்துவிட்டார் என்று தான் கூறவேண்டும் சில நடிகர்களை தவிர மற்றப்படி அனைவரோடும் அவர் நடித்து விட்டார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு , இந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாகிய ஜவான் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் பல கோடிகளை அள்ளிக்குவித்தது. இந்த படத்தின் மூலம் இந்தியிலும் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் கடந்த 2022-ம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுடனான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இவர்களில் ஒரு சிறிய அசைவு கூட சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அதுப்போல தான் தற்போது நடிகை நயன்தாரா ஒர் பதிவை பதிவேற்றியுள்ளார். அந்த பதிவில் அவர் தனது கையை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரமானது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த கடிகாரத்தின் விலை அதிகமாக தான் இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று தான். இந்த நிலையில் தான் அந்த கடிகாரத்தின் விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை நயன்தாரா அணிந்திருந்த அந்த கைக் கடிகாரமானது Rolex நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். இதன் விலை சுமார் 7,445 அமெரிக்க டாலர்களாகும்.

Nayanthara Rolex Watch Price

இந்திய மதிப்பிற்கு பார்த்தால் கிட்டத்தட்ட இந்த கடிகாரத்தின் விலை (Nayanthara Pink Rolex Watch Price) 6 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தற்போது ரசிகர்களிடையில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: நயன்தாரா ரொம்ப கோவக்காரி.. உண்மையை சொன்ன இயக்குநர் ஹரி..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular