Homeசெய்திகள்NEET தேர்வு பயிற்சி: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்..!

NEET தேர்வு பயிற்சி: தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்..!

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் NEET மற்றும் JEE போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கான நீட் பயிற்சி வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை தொடங்கப்படாத நிலையில், தற்போது அரசு பள்ளிக் கல்வி துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி அரசு பள்ளிகளில் படிக்ககூடிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வை எழுத விரும்பும் மாணவர்களுக்கு வாரத்தில் ஜந்து நாட்கள் மாலை நீட் தேர்வுக்கான Coaching Class இலவசமாக நடத்தப்படும். அதாவது வகுப்புகள் முடிந்த பிறகு பயிற்சி வகுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Govt NEET Exam Coaching

ஆர்வம் உள்ள மாணவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம், மற்ற மாணவர்களை வற்புறுத்த கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களின் பட்டியலை சேகரித்து இந்த வாரம் முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி கணிதம், அறிவியல் பாடங்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular