Homeசெய்திகள்H5N1 Virus: கொரோனாவை விட 100 மடங்கு அதிகமாக பாதிக்கும் புதிய வைரஸ்..! அதிர்ச்சியில் மக்கள்..!

H5N1 Virus: கொரோனாவை விட 100 மடங்கு அதிகமாக பாதிக்கும் புதிய வைரஸ்..! அதிர்ச்சியில் மக்கள்..!

கடந்த 2020-ம் ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்த நோய் தான் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டது. பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்தும் மூடப்பட்டது. பல மாதங்களாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்த வைரஸ் தாக்கத்தின் போது ஏற்பட்ட இழப்புகள் மிகவும் அதிகம்.

இந்நிலையில் தான் தற்போது மற்றொரு தொற்று நோயாக பறவைக் காய்ச்சல் (Paravai Kaichal Virus) பரவிக்கொண்டு உள்ளது. இந்த தொற்று நோய் H5N1 வைரஸின் மூலம் பரவுகிறது. மேலும் இந்த வைரஸ்கள் குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளனர். அந்த தகவல்களின் படி இந்த பறவைக்காய்ச்சல் நோயானது கொரோனா வைரஸை விட 100 மடங்கு ஆபத்தானது என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த நோயின் மூலம் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த வைரஸ் (Threting New Virus) தீவிர நிலைகளை நெருங்கி வருகிறது என்றும் இது உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்தும் அதிக அளவிலான வாய்ப்புகள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிட்ஸ்பர்க்கில் உள்ள முன்னணி பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி இந்த காய்ச்சல் பற்றி கூறுகையில் இந்த H5N1 காய்ச்சலுக்கு மனிதர்கள் உட்பட பாலூட்டிகளை அதிக அளவில் பாதிக்கும் ஆற்றல் உள்ளது என்று கூறியுள்ளார்.

Paravai Kaichal Virus

இந்த H5N1 வைரஸ் (H5N1 Virus) பரவல் அமெரிக்காவில் உள்ள 6 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று காரணமாக அதிக அளவில் பாதிக்ப்பட்டவர்கள் மனிதர்கள் மட்டுமின்றி பசுக்கள், பூனைகள் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் தற்போது அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இது நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: கோடைகாலத்தில் வெயிலை விட அதிகரிக்கும் AC மின் கட்டணம்… செலவை குறைக்க எத்தனை Ton AC வாகங்க வேண்டும்…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular