Homeசெய்திகள்இலங்கைக்கு கைகொடுக்கும் இந்தியா..! உறுதியளித்த நிர்மலா சீதாராமன்..!

இலங்கைக்கு கைகொடுக்கும் இந்தியா..! உறுதியளித்த நிர்மலா சீதாராமன்..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 1ஆம் தேதி 3 நாள் பயணமாக இலங்கை சென்றார். இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் கடன் சீரமைப்பு விவகாரங்களில் இந்தியா முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கும் என்று உறுதியளித்தார்.

இலங்கையில் உள்ள திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கும் சென்றார் நிர்மலா சீதாராமன். ஆனால் இந்த பயணத்தில் எந்த ஒரு புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் சில திட்டங்கள் மட்டும் உறுதி செய்யப்பட்டது.

வியாழக்கிழமை இரவு Nirmala Sitharaman மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் தங்கள் இரு நாடுகளுக்கிடையே உள்ள பெளத்த உறவுகளை பலமாக்குவதற்கும், இந்தியாவிடமிருந்து 15 மில்லியன டாலர் மானிய உதவிக்கான ஒப்பந்தத்தை மாற்றிக்கொண்டனர்.

Nirmala Sitharaman and Annamalai

இதனை தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற “நாம் 200” நிகழ்ச்சியில் நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக BJP தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது இந்தியா 33 ஆயிரம் காேடி நிதி உதவி அளித்ததை நினைவு கூர்ந்தார்.

தற்போது இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. இந்தியா இலங்கைக்கு சிறந்த நண்பன் என்ற முறையில் இலங்கையின் கடன் சீரமைப்புக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பேசினார். அவரை தொடர்ந்து பேசிய Sri Lanka அதிபர் Ranil Wickremesinghe இலங்கை கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்தபோது, இந்தியா உதவியதையும் அதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் யாழ்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலுக்கு வந்த பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular