Homeசெய்திகள்மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்..! லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு..!

மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம்..! லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு..!

தமிழகத்தில் வரும் (நவ9) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இதனை அரசு ஏற்காத பட்சத்தில் நாங்கள் காலவறையற்ற Strike-ல் ஈடுபடுவோம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளத்தின் தலைவர் தன்ராஜ் அறிவித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள லாரி, மினி வேன் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார வாகன சங்கங்களின் ஒருங்கினணப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் 40 சதவீத சாலை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். கடந்த காலங்களில் லாரிகளுக்கு விதிக்கப்பட்ட ஆன்லைன் அபராதங்களை ரத்து செய்ய வேண்டும். லாரிகளின் தொழில் நிலையை கருத்தில் கொண்டு இனி ஆன்லைன் வரிகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் தொடங்கயுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Velai Nirutha Porattam in Tamil Nadu

இதன் காரணமாக தமிழகத்தில் 6.5 லட்சம் லாரிகள் இயங்காது என அறிவித்துள்ளனர். இதனால் 30 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular