Homeசெய்திகள்உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை..! தீபாவளிக்கு முன் குறைய வாய்ப்பிருக்கா?

உச்சம் தொட்ட வெங்காயத்தின் விலை..! தீபாவளிக்கு முன் குறைய வாய்ப்பிருக்கா?

சமையலுக்கு அத்தியாவசிய தேவையான காய்கறிகளில் ஒன்றுதான் வெங்காயம் (Onion). இதில், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உள்ளது. நவராத்திரி கொண்டாட்டத்திற்கு பிறகு வெங்காயத்தின் விலை சற்று உயர ஆரம்பித்துவிட்டது.

வெங்காயத்தின் விலை உயர்வு: Onion Price

பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை கிலோ ரூ.90க்கு விற்க்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் Vengayathin Vilai ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

சென்னையில் கோயம்பேடு சந்தையில் ரூ.20 க்கு விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயத்தின் விலை ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து வெங்காய வியாபாரிகள் கூறியது சின்ன வெங்காயம் சேலம் மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. வெங்காயம் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் சில வாரங்களாக மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு காத்திருந்த வெங்காயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

அதேபோன்று மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மற்றும் கர்நாடக மாநிலம் தாவணகெரே, பெல்லாரி போன்ற இடங்களில் இருந்து பெரிய வெங்காயம் தமிழகத்துக்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பெரிய வெங்காயம் வரத்தும் குறைவாகவே உள்ளது.

வெங்காயத்தின் விலை எப்போது குறையும்?

Onion Price Today

ஒரு சில மாதங்களுக்கு முன்பு தக்காளியின் விலை அதிகரித்தது போல் தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்திருப்பது பொது மக்களை வேதனையடையச் செய்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மழை இல்லாததால் வெங்காயத்தின் விளைச்சல் சற்று குறைவாக இருக்கிறது.

அடுத்த சில நாட்கள் பண்டிகை காலங்கள் என்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதிக்கு பிறகு வெங்காயத்தின் விலை குறையும் என்று விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular