Homeசெய்திகள்தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி..! தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி..! தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசுதான். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.

ஆண்டு தோறும் புதுவிதமான பட்டாசுகள் அறிமுகமாகி கொண்டு இருக்கிறது. குழந்தைகளும், வாலிபர்களும் ஆசையாக வாங்கி Deepavali பண்டிகை அன்று சந்தோஷமாக வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் அதனை குறைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளி தினத்தன்று சுற்றுச்சூழல் பெரும் அளவில் மாசுபடும் என்பதால் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

Crackers

இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாளில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே Pattasu வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பசுமை வெடிகளை மட்டும் வெடிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டடாசுகளை வெடிக்க வேண்டும் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular