Homeசெய்திகள்இந்திய தேர்தல்களில் அதிக முறை போட்டியிட்டவர்… யாருப்பா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு…

இந்திய தேர்தல்களில் அதிக முறை போட்டியிட்டவர்… யாருப்பா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு…

தேர்தல் என்றாலே அனைவரும் கொண்டாட்டம் தான். பெரும் தலைவர்கள் முதல் புதிய புதிய வேட்பாளர்கள் வரை அனைவரும் அவர்களின் விதியாசமான அனுகுமுறைகளில் வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரிப்பார்கள். தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் முதன்மையான நேக்கம் வெற்றி பெருவதே ஆகும். ஆனால் நமது இந்திய வேட்பாளர்களில் ஒரு வித்தியாசமான நபர் இருக்கிறார். இவரின் தேர்தலில் போட்டியிட முதன்மையான நோக்கமே தேர்தலில் தோல்வி அடைவது (World’s Biggest Election Loser) தான்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரை சேர்ந்தவர் கே. பத்மராஜன். இவர் இது வரை பஞ்சாயத்து, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஏன் குடியரசுத் தலைவர் தேர்தலில் உட்பட 12 மாநிலங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட்டு உள்ளார். ஆனால் ஒரு முறைகூட வெற்றி பெற்றதில்லை. தோல்வி அடைவதே இவரின் இலக்கு ஆகும்.

பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத Padmarajan சைக்கிள் கடை வைத்துள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 239 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இவர் இந்தியாவிலேய அதிக தேர்தல்களில் போட்டியிட்டவர் என்ற சாதனை படைத்துள்ளார். உண்மையில் இவரின் உண்மையான இலக்கு என்னவென்றால் அதிக தேர்தல்களில் தோல்வி அடைவது தான்.

இசர் முதன் முதலில் 1988 ஆம் ஆண்டுதான் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் தேர்தலில் போட்டியிட போவதாக கூறிய போது இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் இவரிடம் ஒரு சைக்கிள் கடைக்காரர் நீ பெல்லாம் தேர்தலில் நிற்று என்ன செய்ய போகிராய் என விளையாட்டாக கேலி செய்துள்ளனர். இதன் பிறகே இந்த ஆசை அவருக்கு தோன்றியுள்ளது.

Therthal Mannan Padmarajan

அதிக தேர்தல்களில் போட்டியிட்ட இவர் தேர்தல் மன்னன் பத்மராஜன் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் சைக்கிள் கடையில் மூலம் சம்பாதித்த 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை செலவிட்டுள்ளதாக கூறுகிறார்.

தோல்வி அடைவதற்காக வேப்புமனு தாக்கல் செய்யும் இவர் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் முதலமைச்சர் போன்றவர்களை எதிர்த்தும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் விதிமுறைக்கு ஏற்ப வேட்புமனு தாக்கல் செய்த தொகுதிக்கு சென்று வரும் இவர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 1887 வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக முறை தோல்வி அடைந்தாலும் மனம் தளராது இந்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் தருமபுரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன். இந்த முறையும் கண்டிப்பாக தோல்வி அடைந்தே தீருவேன் என மன உறுதியுடன் போட்டியிடுகிறார் World’s Biggest Election Loser Padmarajan.

மேலும் படிக்க: X -ன் புதிய அப்டேட்… இனி வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்…
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular