Homeசெய்திகள்'வந்தே பாரத்' ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவேண்டும்..! பயணிகள் வேண்டுகோள்..!

‘வந்தே பாரத்’ ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவேண்டும்..! பயணிகள் வேண்டுகோள்..!

சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் நாட்டின் அதிவேகமான ரயில் சேவையான வந்தே பாரத் ரயில் கடந்த மாதம் 24 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் போன்ற தொடர் விடுமுறைகள் வர உள்ள நிலையில் வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நமது நாட்டில் 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில் டெல்லி – வாரணாசி இடையே இயக்கப்பட்டது, அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் வந்தே பாரத் ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் சென்னை-நெல்லை, சென்னை-விஜயவாடா வழிதடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் இருந்து இயக்கப்படும் சென்னை-நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் ஆனது மற்ற விரைவு ரயில்களை விட மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயங்கும், இந்த ரயிலின் கட்டணம் அதிகம் என்றாலும் பயண நேரம் குறைவு என்பதால் பயணிகள் அதிகம் முன்பதிவு செய்கின்றனர். அதிலும் குடும்பத்துடன் பயணிப்பவர்களே அதிகமாகும். தெற்கு ரயில்வே கூறியுள்ள தகவல் படி 77 சதவீதம் பேர் குடும்பத்துடன் சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் பயணிக்கிறார்களாம். எனவே, பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் முன்பதிவு முடிந்து விட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

Vande Bharat

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் ஆனது சென்னையிலிருந்து நெல்லைக்கும், நெல்லையிலிருந்து சென்னைக்கும் இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகிறது. இதில் பயணிக்க கட்டணமாக எக்ஸிக்யூட் ஷேர் வகுப்பிற்கு ரூ.3,055/- ஆகவும், ஏசி பெட்டிகளுக்கு ரூ.1,665/- ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

இந்த ரயில் சேவையை நெல்லை மாவட்ட மக்கள் மட்டும் இன்றி தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அதிக அளிவில் பயன்படுத்துகின்றனர். அதுமட்டும இன்றி தொடர் விடுமுறைகள் வர உள்ள நிலையில் மக்களின் பண்பாட்டிற்காக சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular