Homeசெய்திகள்ஜார்கண்ட் பயணம்: முண்டாவின் கிராமத்திற்கு செல்லும் முதல் பிரதமர்..!

ஜார்கண்ட் பயணம்: முண்டாவின் கிராமத்திற்கு செல்லும் முதல் பிரதமர்..!

பிரதமர் மோடி அவர்கள் நவம்பர் 14,15 ஆம் தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் சென்றுள்ளார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த பழங்குடியினரின் விடுதலைக்காக போராடிய வீரர் பிர்சா முண்டாவின் உலிஹட்டு என்ற கிராமத்திற்கு நாளை செல்லவுள்ளார் PM Modi.

பிரதமர் மோடி இரண்டுநாள் பயணமாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு இன்றும் நாளையும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை நவம்பர் 15 அம் தேதி காலை 9.00 மணி அளவில் ராஞ்சியில் உள்ள வீரர் பிர்சா முண்டாவின் நினைவு பூங்காவிற்கும், சுதந்திர போராட்ட அருங்காட்சியகத்திற்கும் செல்லவுள்ளார். அதன் பிறகு ஆங்கிலேயர்கள் மற்றும் நிலப்பிரபுக்களை எதிர்த்து, அடிமைப்பட்டிருந்த பழங்குடியினரின் விடுதலைக்காக போராடிய Birsa Munda பிறந்த ஊரான Ulihatu Village -க்கு சென்று அவரது உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார் Prime Minister Narendra Modi. அந்த கிராமத்திற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடியை சாரும்.

Birsa Munda Statue

காலை 11.00 மணி அளவில் மூன்றாவது ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் 2023 கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவை தொடங்கி வைக்கிறார். அதாவது, அரசின் முக்கிய திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்வதற்காக வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான சபத யாத்திரையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் 24,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் குறிப்பாக பாதிக்கப்பட்ட பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கான குழுவையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

மேலும் பிரதமரின் விவசாயிகளின் நலத்திட்டமான பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 15 -வது தவணை திட்டமாக சுமார் 18,000 கோடி ரூபாய் தொகையை பிரதமர் விடுவிக்கிறார். Jharkhand மாநிலத்திற்காக சுமார் 7,200 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் முடிவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்பணிக்கிறார்.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular