Homeசெய்திகள்பிரதமர் மாேடி பாராட்டிய Vocal For Local விளம்பரம்..! உள்ளூருக்கான குரல்..!

பிரதமர் மாேடி பாராட்டிய Vocal For Local விளம்பரம்..! உள்ளூருக்கான குரல்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு Vocal For Local இயக்கம் மக்களிடையே பெரும் உத்வேகம் பெற்று வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வோக்கல் ஃபார் லோக்கல் என்பது உள்ளூருக்கான குரல், அதாவது இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும் என்ற இயக்கமாகும்.

ஸ்டார் பிளஸ் என்ற இந்தி சேனலில் ஒளிபரப்பாகும் பிரபல அனுபமா தொடரில் நடிக்கும் Rupali Ganguly மற்றும் Gaurav Khanna ஆகியோர் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட Vocal For Local இயக்கத்திற்கான விளம்பரத்தில் நடித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு உள்ளூர் பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்கும் வகையில் இருவரும் இவ்விளம்பரத்தில் நடித்துள்ளனர். இருவரும் டிவி தொடரில் உள்ள Anupamaa மற்றும் Anuj Kapadia என்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளனர். இந்த விளம்பரத்தை Prathamar Modi அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த Vocal For Local (உள்ளூருக்கான குரல்) என்ற இயக்கத்தை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த விளம்பரமானது எப்போதும் பெரிய மற்றும் பிராண்டட் தயாரிப்பு பொருட்களை வாங்குவதற்குப் பதில் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை வாங்குங்கள் என்று இந்த விளம்பரம் மக்களுக்கு வலியுறுத்துகிறது. மேலும் இவ்விளம்பரத்தில் UPI -ல் பண பரிவர்த்தனை செய்வது குறித்தும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular