Homeதொழில்நுட்பம்Poco C65: 8,400 ரூபாயில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்…

Poco C65: 8,400 ரூபாயில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்…

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வகையான நிறுவனம் தங்களின் புதிய புதிய படைப்புகளை வெளியிட்டு கொண்டு தான் உள்ளன. அதுமட்டுமின்றி அந்த படைப்புகள் அனைத்தும் குறைந்த விலையிலும் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தி வருகின்றன. இதன் மூலம் அந்த நிறுவனங்களுக்கு நல்ல வரவேற்பையும் கிடைத்து வருகிறது. அதுபோல தான் தற்போது ஒரு அர்ப்புதமான படைப்பை போகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் தற்போது புதிதாக போகோ சி65 என்னும் வகையான போனை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போகோ சி65 ரக போனாது நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த போனில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.74 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எல்இடி ஃபிளாஷுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா சென்சார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 8 எம்பி செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மௌண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வகையான ஸ்மார்ட்போன்கள் மேட் பிளாக் மற்றும் பேஸ்டல் ப்ளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த போன் பிளிப்கார்ட் வழியே விற்பனைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Poco New Launch

விற்பனை தொடங்கும் நாள்

இந்த போன் டிசம்பர் 18-ம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த புதிய மாடல் போகோ போனை ஐசிஐசிஐ கார்டு மூலம் பணம் செலுத்தி வாங்கினால் ரூ.1,000 உடனடி தள்ளுபடியை நிறுவனம் வழங்குவதாகவும் கூறியுள்ளது.

Poco C65 போன் விலை

இந்த மாடல் ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் இந்தியாவில் ரூ. 8,499 என்கிற விலையில் விற்கப்பட்வுள்ளது. மேலும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.9,499 என்கிற விலையிலிருந்து தொடங்குகிறது. அதுமட்டுமின்றி மேலும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.10,999 என்கிற விலையிலிருந்து தொடங்குகிறது. இந்த போன் பிளிப்கார்டில் நவம்பர் 18 தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

போகோ சி65
Poco C65

Poco நிறுவனம் தனது புதிய அறிமுகமாக Poco C65 எனும் மொபைலை வெறும் 8,400 ரூபாயில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Product Brand: Poco

Product Currency: INR

Product Price: 8400

Product In-Stock: InStock

Editor's Rating:
4.49
இதையும் படியுங்கள்: Realme C67 5G New Launch: வெறும் 14000 ரூபாயில் புதிய அறிமுகம்…
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular