Homeசினிமாநடிகர் விக்ரம் மீது போலீசில் புகார்..! நான் பாட்டுக்கு சிவனேன்னு தானடா போயிட்டு இருக்கேன்..!

நடிகர் விக்ரம் மீது போலீசில் புகார்..! நான் பாட்டுக்கு சிவனேன்னு தானடா போயிட்டு இருக்கேன்..!

தான் நடிக்கும் ஒரு படத்திற்காக தன்னை எந்த அளவிற்கு வருத்திக்கொள்ள முடியுமே அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்திற்கான தன்னை செதுக்கி கொள்ளும் நடிகர்களில் இவரும் ஒருவர். இந்த நிலையில் இவர் பென்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சித்தா படத்தின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்க்கவுள்ளார் விக்ரம். இந்த படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். மேலுமு் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் ப்ரோமோ வீடியோவுடன் வெளியானது. மேலும் இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இனைந்துள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியானது.

இந்த நிலையில் விக்ரம் பிறந்தநாளின் போது விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. இப்படத்திற்கு வீர தீர சூரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசர் வெளியான அதே நாளில் படத்தின் பெயருடன் கூடிய போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டரில் விக்ரம் தனது இரு கைகளிலும் அருவாள் வைத்திருக்கும்படி அந்த புகைப்படம் இருந்தது.

இந்த நிலையில் தான் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் (Police Complaint Against Vikram) அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை (Police Complaint Against Actor Vikram) சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்துள்ளார்.

Veera Dheera Sooran Movie Poster

அவர் அளித்துள்ள புகாரில் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படத்தின் போஸ்டரில் (Veera Dheera Sooran Movie Poster) விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறது எனவே விக்ரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: Kanguva Movie Budget: கங்குவா படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? எந்திரன் படத்தையே மிஞ்சிடும் போலையே..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular